பெட்ரோல் பற்றி நிலவும் தவறான கூற்றுகளும், உண்மைகளும்!

பெட்ரோல், டீசல் பற்றி நிலவும் தவறான கூற்றுகளும், அதன் உண்மைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வாகன எரிபொருள் என்றாலே பெட்ரோல், டீசல்தான். இந்த இரு முக்கிய வாகன எரிபொருள் பற்றி உலவும் தவறான கூற்றுகள் பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் வெளியிடப்பட்டு இருக்கும் ஆய்வு முடிவுகள் குறித்த தகவல் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம்.

01. எரிபொருள் நிரப்பும் நேரம்

01. எரிபொருள் நிரப்பும் நேரம்

காலை, மாலை வேளைகளில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கூறுவது இயல்பு. குளிர்ச்சியான நேரத்தில் எரிபொருளின் அடர்த்தி சரியாக இருக்கும் என்பது வாதமாக இருக்கிறது.

உண்மை

உண்மை

பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருப்பதால், வெளிப்புற வெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்படாது. எனவே, எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் நிரப்பலாம் என்பது புதிய வாதமாக முன்வைக்கப்படுகிறது.

02. குறைவான எரிபொருள்

02. குறைவான எரிபொருள்

குறைவான எரிபொருளுடன் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்கும்போது எஞ்சினில் பாதிப்பு ஏற்படும் என்பது கருத்தாக உள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் டேங்க்கின் அடிப்பாகத்தில் இருக்கும் தூசி, தும்பட்டிகள் எஞ்சினுக்குள் போய்விடும் என்பதே வாதமாக வைக்கப்படுகிறது.

உண்மை

உண்மை

முழுமையாக எரிபொருள் நிரப்பி இருக்கும்போது எவ்வாறு பெட்ரோல் எஞ்சினுக்கு உறிஞ்சப்படுகிறதோ அதேபோன்றுதான், குறைவாக இருக்கும்போதும் எஞ்சினுக்கு பெட்ரோல் செல்லும் வகையில் பெட்ரோல் டேங்குகள் வடிவமைக்கப்படுகின்றன. எரிபொருள் குறைவாக இருப்பது பற்றி கவலை கொள்ள வேண்டாம். சிறப்பான வடிகட்டி அமைப்பும் துணை இருக்கும்.

03. பிரிமியம் பெட்ரோல்

03. பிரிமியம் பெட்ரோல்

பிரிமியம் பெட்ரோல் போட்டால் செயல்திறனும், மைலேஜும் கூடுதலாக இருக்கும் என்பது பரவலாக சொல்லப்படும் செய்தியாக இருக்கிறது. பெட்ரோல் நிலையங்களில் கூட பிரிமியம் பெட்ரோலுக்கு பரிந்துரைக்கின்றனர்.

உண்மை

உண்மை

பிரிமியம் பெட்ரோலுக்கும், சாதாரண பெட்ரோலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மிக குறைந்த அளவில் செயல்திறன் அதிகமாக இருக்கும். பெரிய அளவிலான வித்தியாசங்களை எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில், தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைக்கும் அளவில் ஆக்டேன் அளவுடைய எரிபொருளை பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும்.

04. எரிபொருள் சிக்கன கணக்கீடு

04. எரிபொருள் சிக்கன கணக்கீடு

கார்களில் இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்ற கணக்கீடு காட்டும் மீட்டர் கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இருக்கும் எரிபொருளில் 225 கிமீ தூரம் பயணிக்கலாம் என்று காட்டும். ஆனால், நடைமுறையில் இந்த கணக்கீடு தவறானதாக பார்க்கப்படுகிறது.

உண்மை

உண்மை

இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்ற அளவுகோல் சரியான முறையிலேயே கணக்கிடப்படுகிறது. அதேநேரத்தில், நெடுஞ்சாலை மற்றும் நகரச்சாலையில் பயணிக்கும்போது ஓட்டுதல் முறையில் ஏற்படும் மாற்றத்திற்கு தக்கவாறு, இந்த கணக்கீடு அளவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதுவே சிலர் இதனை தவறாக நினைக்க காரணம்.

05. ஜெட் எரிபொருள்

05. ஜெட் எரிபொருள்

ஜெட் எரிபொருள் என்பது மண்ணெண்ணெய்தான். சிலர் ஜெட் எரிபொருளை பயன்படுத்தும்போது எஞ்சின் மிக அதிக செயல்திறனை வெளிப்படுத்தும்; மிக வேகமாக செல்ல முடியும் என்று கூற்று இருக்கிறது.

உண்மை

உண்மை

ஆனால், ஜெட் எரிபொருளை கார் எஞ்சின் எரிக்கும் நுட்பத்தை பெற்றிருக்கவில்லை என்பதை மனதில் வைக்கவும். எனவே, சாதாரண பெட்ரோல், டீசலையே பயன்படுத்துவதுதான் சிறந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Vehicle Fuel Myths And Truths.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X