வாகன உரிமையாளர்களின் விபரங்கள் ரூ.5-க்கு விற்பனை? வாகன், சாரதி இணையதளங்களில் தடயவியல் தணிக்கைக்கு உத்தரவு!

வாகன உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், அரசு போக்குவரத்து இணையதளங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வாகன் (VAHAN), சாரதி (SARATHI) உள்ளிட்ட முக்கிய இணையதளங்களில் தடயவியல் தணிக்கை மேற்கொண்டு, தகவல்கள் கசிந்ததற்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு எண் மூலம் அதன் உரிமையாளர் தொடர்பான சில விவரங்களைப் பெற முடியும். இந்த வசதி போக்குவரத்துச் சேவைகளை எளிதாக்கினாலும், தனிப்பட்ட தகவல்கள் தவறான நபர்களிடம் சென்றால் அது தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக மாறும். அரசு தரவுத்தளங்களில் உள்ள தகவல்கள் அனுமதியற்ற வழிகளில் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தற்போது இந்த விவகாரம் பெரிதாகி உள்ளது.

Data Leak

வெறும் 5 ரூபாய்க்கு தரவுகள்

சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைடெரஸ் (Cyderes) மேற்கொண்ட ஆய்வில், டெலிகிராம் (Telegram) வழியாக ஒரு வாகனம் தொடர்பான தகவல்களை வெறும் 5 ரூபாய்க்கு தகவல்களை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அரசு இணையதளங்களில் நேரடியாக ஊடுருவி இந்த தகவல்கள் எடுக்கப்பட்டதா அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை தவறாகப் பயன்படுத்தி தகவல்கள் திருடப்பட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, 2024 ஜனவரி முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மூலமாக 1.71 கோடி முறை வாகனத் தரவுகள் இந்த அரசு இணையதளங்களில் தேடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு 25,314 தகவல்கள் கொண்ட சான்றுகள் வழங்கப்பட்டதாகவும் தேசிய தகவல் மையம் (NIC) தெரிவித்துள்ளது.

Also Read

இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமான தேடல்கள் என்று எடுக்ககொள்ள முடியாது. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் தரவுகள் எடுக்கப்பட்ட நிலையில், அவை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன, அரசு அனுமதிக்கப்பட்ட வரம்புகள் மீறப்பட்டதா அல்லது தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதா என்பதை தெளிவுபடுத்துவது அவசியமாகிறது.

தடயவியல் தணிக்கை

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நடவடிக்கையின்படி, இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவான CERT-In மூலம் நான்கு முக்கிய இணையதளங்களின் பாதுகாப்பு ஆய்வு செய்யப்பட உள்ளது. வாகன், சாரதி, மின்னணு அபராத இணையதளம் (e-Challan), மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் தொடர்பான இணையதளம் (PUCC) ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளன.

தடயவியல் தணிக்கை மூலம் தகவல்கள் எவ்வாறு வழங்கப்பட்டது, பாதுகாப்பு அமைப்புகளில் இருந்த குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். மேலும், எந்த நிறுவனங்கள் தரவுகளை அணுகிய விதம், அவற்றின் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்தனவா என்பதையும் ஆய்வு செய்வது முக்கியமாகும்.

Also Read

தனியார் நிறுவனங்களுடன் வாகனத் தரவுகளைப் பகிரும் நடைமுறை 2026 அக்டோபர் 1 முதல் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஏற்கெனவே பெறப்பட்ட தகவல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன, அவை வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டனவா, பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்பட்டுள்ளனவா என்பன குறித்தும் ஆய்வு தேவைப்படுகிறது. வாகன உரிமையாளர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

என்ன பாதிப்பு?

வாகனப் பதிவு விவரங்களுடன் முகவரி, காப்பீட்டுத் தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் இணைக்கப்படும்போது, அவை தவறான நபர்களிடம் சென்றால் மோசடி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். போலியான காப்பீட்டு அழைப்புகள், குறிவைத்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஏமாற்று முயற்சிகள் போன்ற அபாயங்கள் உருவாகலாம். எனவே, இந்த விவகாரம் இப்போது தீவிரமான தனியுரிமை பிரச்னையாக இருப்பதால் அவசரமாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின்னரே இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளிவரும்.

Article Published On: Sunday, October 25, 2026, 10:15 [IST]
English summary
Vehicle owner data leak vahan sarathi forensic audit india
மேலும்... #central government
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out