ரூ. 20,000மாக இருந்த அபராதத்தை ஆயிரம் ரூபாயாக குறைத்த இளைஞர்.. இதுக்கு ஒரு சட்டம் இருக்கா! இது தெரியாம போச்சே!

லோக் அதாலத் வாயிலாக வாகன உரிமையாளர் ஒருவர் தனது போக்குவரத்து அபராதத்தை 20,000 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக குறைத்துள்ளார். இது எப்படி சாத்தியமானது என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அபராதத்தை எப்படி குறைத்தார் என்கிற தகவலை அந்த நபர் ரெட்டிட் வாயிலாக வெளியிட்டுள்ளார். வாங்க இதுபற்றிய விபரத்தை விரிவாக பார்க்கலாம்.

நம்மில் பலர் அதிகம் அறியப்படாத சட்டங்களில் லோக் அதாலத்-ம் ஒன்றாக இருக்கின்றது. அபராதங்களை மிகப் பெரிய அளவில் குறைக்கவும் இந்த சட்டம் நமக்கு உதவியாக இருக்கின்றது. முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கின்றன.

Traffic fine cut

உதாரணமாக ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு முன்னதாக ரூ.100 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது ரூ. 1,000 வரை அபராத வசூலிக்கப்படுகின்றது. இத்தகைய உச்சப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டால் சமாளிப்பது எப்படி என்கிற தகவலையே ரெட்டிட் பயனர் ரெட்டின் பதிவின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, தான் பெற்ற உச்சபட்ச அபராதத்தை எப்படி குறைத்தேன் என்கிற விபரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ரெடிட் பயனர் அவருடைய காரை அவருடைய நண்பருக்கு கடனாக வழங்கியதில் இருந்து இந்த ஸ்டோரி தொடங்குகின்றது. அந்த நண்பர் திருமணம் ஒன்றிற்கு செல்வதற்காக காரை கடனாக பெற்றிருந்தார்.

தொடர்ந்து, நொய்டாவிலிருந்து ஃபரிதாபாத்திற்கு அந்த காரில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரை டெல்லி காவல்துறை மடக்கி இருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் காரின் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC) காலாவதியாகி இருந்தது. இதை ஆய்வின் வாயிலாக அறிந்துக் கொண்ட டெல்லி போக்குவரத்து போலீஸார், இந்த விதிமீறலுக்கான அபராதமாக ரூ. 20 ஆயிரத்திற்கான அபராத செல்லானை வழங்கினர்.

டிரைவருக்கு 10 ஆயிரம் ரூபாயும், கார் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் என்றும் தனி தனியாக அபராத செல்லாணை காவலர்கள் வழங்கினர். இத்தகைய மாபெரும் அபராதம் குறித்தும், இதற்கான தீர்வைக் கேட்டும் அந்த ரெட்டிட் பயனர் ரெட்டிட் பக்கத்தில் ஓர் பதிவைப் போட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே ரெட்டிட் வாயிலாக, லோக் அதலாத்தை நாடும்படி அவருக்கு அறிவுரைக் கிடைத்திருந்தது. இந்த நிலையிலேயே அந்த நபர் ஆன்லைன் வாயிலாக லோக் அதலாத்தில் டோக்கனைப் பெற்றிருக்கின்றார். லோக் அதாலத், சமரசமாக செல்வதற்கான மன்றம், டில்லி நீதிமன்றங்களில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இந்த அமர்வுகள் நடைபெறும். இதிலேயே கோரிக்கை வைக்க அவர் அப்பாயிண்ட்மெண்ட்டை பெற்றிருந்தார்.

டோக்கனை பிரிண்ட் எடுக்க மட்டும் அவர் சுமார் 1.5 மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சாகேத் நீதிமன்றத்திற்கு அவர் சென்றிருக்கின்றார். அங்கு, ஒரு போக்குவரத்து காவலரின் உதவியுடன் நியமிக்கப்பட்ட நீதிமன்ற அறையை அடைந்தார். நீதிமன்றத்தின் உள்ளே, ஒரு கண்ணாடி பேனலுக்குப் பின்னால் அமர்ந்துக் கொண்டு ஒரு நீதிபதி சலான் தொகைகளை விரைவாக மதிப்பாய்வு செய்தார்.

அதிக சலசலப்பு ஏதும் இல்லாமல், ஒவ்வொரு குற்றத்திற்கும் ரூ.500 என மொத்த அபராதமாக ரூ.1,000 ஆகக் குறைத்து அவர் உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த செயல் அவருக்கு நிம்மதி பெருமூச்சை விட செய்திருக்கின்றது. குறைக்கப்பட்ட தொகையை ரொக்கமாக செலுத்தி அங்கேயே அதற்கான ஆவணத்தை அவர் பெற்றிருக்கின்றார்.

தொடர்ந்து, கட்டணம் செலுத்திய ரசீதை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஆலோசனை வழங்கி இருக்கின்றார். அபராதம் கட்டப்பட்டுவிட்டதா என்பதைச் சரிபார்க்க இந்த ஆவணம் அவசியம் என்றும் அவர் கூறினார். இதுதவிர, செல்லாண் அப்டேட் செய்ய மாதம் ஆகலாம். அதுவரை கட்டாயண் இதை பத்திரமாக வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தக் கதையின் வாயிலாக, போக்குவரத்து அபராதத்தினால் ஏற்படும் தகராறுகளைத் தீர்ப்பதில் லோக் அதாலத்தின் முக்கியத்தும் வெளிக்காட்டப்பட்டு உள்ளது. அதிகபட்சம் அபராதம் விதிக்கப்பட்டால் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு லோக் அதலாத்தின் உதவியை பெற்று அதைக் குறைத்துக் கொள்ளலாம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 17:34 [IST]
English summary
Vehicle owner reduces fine from rs 20000 to rs 1000
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+