அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பெரு நகரங்களில் வெகுஜனங்கள் பெரிய அளவிலான உடல்பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். புற்றுநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல கொடிய நோய்களின் பீடிகைக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.O திரைப்படம் நல்ல விமர்சனத்தை பதிவு செய்து வருகிறது. ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒப்பீடு செய்வது தவறான விஷயமாக பார்க்கப்படுவதுடன், காட்சிகள் மிக தத்ரூபமாக முப்பரிமாண திரைப்படங்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க் சினிமாவாக இது சிலாகித்து சொல்லப்படுகிறது.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

இந்த நிலையில், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக சொல்லப்பட்டாலும், இந்த புதிய 2.O திரைப்படம் புதிய கதைக்களத்தில் வேறு பரிமாணத்தில் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி, மொபைல்போன்களின் கதிர்வீச்சால் பறவை இனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த படம் புதிய கோணத்தில் எல்லோரின் சிந்தனையை தூண்டும் விதத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

மனிதர்கள் பயன்படுத்தும் மொபைல்போன்கள் பிற உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இந்த படம் சொல்வதாக எடுக்கப்பட்டு இருக்கிறது. பிற உயிரினங்களும் இந்த உலகில் வாழ மனிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்துகிறது.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

ஆனால், இக்கால கட்டத்தில் மனிதன் பிற மனிதர்களையே பொருட்டாக கருதாத நிலை இருக்கிறது. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பெரு நகரங்களில் வெகுஜனங்கள் பெரிய அளவிலான உடல்பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். புற்றுநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல கொடிய நோய்களின் பீடிகைக்கு ஆட்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் 3.O வந்தால் எந்தெந்த காட்சிகள் முக்கியமாக இருக்கும் என்பதை உண்மை தகவல்களை படத்துடன் இணைத்து கொடுத்துள்ளோம்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

வாகனங்களால் பெருநகரங்களில் ஏற்பட்டு வரும் காற்று மாசுபாடு என்பது முக்கிய காரணியாக மாறி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக, மனிதர்கள் உயிர் வாழ தகுதியற்ற நிலை ஏற்பட்டு இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்து வருகின்றன. அங்கு மக்கள் படும் இன்னல்களும், அவர்களது குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளும் காட்சிகளாகப்படும். பள்ளிகளுக்கு விடுமுறை, குழந்தைகள் சுவாசக் கோளாறால் அவதிப்படும் காட்சிகள் இடம்பிடிக்கும்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

டெல்லியில் பெருகிய வாகன எண்ணிக்கை முக்கிய காரணம். தனிநபர் வருவாய் அதிகரித்து பொருளாதார ரீதியில் இந்தியர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இது மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஆனால், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வீட்டிற்கு ஒரு கார் இருந்த நிலை மாறி, இப்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு கார் அல்லது போட்டிருக்கும் டிரெஸ்ஸுக்கு தக்க நிறத்தில் ஒரு கார் என்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்று வாழும் ஒரு குடும்பத்தில், ஒருவர் வாகன நச்சுப்புகையால் உடல்நலம் பாதிக்கப்படும் காட்சி இடம்பெறலாம்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

கார்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுவது தெரிந்தும் தங்களது நிலையில் இருந்து யாரும் மாற்றிக் கொள்ள விரும்பாமல் இருப்பவர்களையும். கொத்த மல்லி தழை வாங்க கூட காரில் செல்லும் நிலையையும் காட்ட முடியும். வாகன பயன்பாட்டால் வெளியிடும் நச்சுப்புகை பற்றி படித்து தெரிந்து கொண்டவர்கள் கூட சமூக அக்கறை இல்லாமல் செயல்படுவதை காட்சியாக வைக்கப்பட்டிருக்கும்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

டெல்லி மட்டுமல்ல, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல நகரங்கள் வாகனப் பெருக்கத்தால் வரும் ஆண்டுகளில் பெரும் பிரச்னையை சந்திக்க இருப்பதாக எச்சரிக்கை மணி அடிக்கப்படுவது குறித்த அடுத்து நீங்கள்தான் என்ற காட்சியையும் மனதில் இருத்துங்கள்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

போக்குவரத்து நெரிசலால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்பான புள்ளிவிபரங்களும், உலகில் அதிக காற்று மாசுபாடு உடைய நகரங்களை கொண்ட டாப் - 20 நாடுகள் வரிசையில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது பற்றிய காட்சியும் இடம்பெறும்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

குறிப்பாக, வட இந்திய நகரங்கள் மிக மோசமான காற்று மாசுபாடு நிலையில் இருக்கின்றன. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வின்படி, உலகில் 10ல் 9 பேர் மாசடைந்த காற்றை சுவாசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உயிரிழப்புகளை ஏற்படுத்துவதிலும் காற்று மாசுபாடு முக்கிய காரணியாக மாறி இருக்கிறது. அடுத்து நீங்கள்தான் என்பது போல உங்கள் மூக்கில் மேல் ரோபோ விரல் படும்படியான முப்பரிமாண காட்சி ஒன்று வைக்க முடியும்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

ஒவ்வொரு முறை வாகனங்களை பயன்படுத்தும்போது, காற்றை நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கந்தக ஆக்சைடு, தாமிரம் போன்றவை சேர்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் அரசாங்க பரிசோதனை முறைகளை கார் நிறுவனங்கள் எவ்வாறு ஏமாற்றி, கார்களை விற்பனை செய்கின்றன. அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் காட்சி வைக்கலாம்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

வாகனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லாதது குறித்தும், மின்சார கார் பயன்பாட்டை கொண்டு வராததற்கு அரசியல்வாதி ஒருவர் சொல்லும் 'இலுமினாட்டி' கதையையும் சொருகிவிடலாம். சமூக அக்கறை கொண்ட கதைக்களங்களில், சமூக அக்கறை இல்லாதது போன்ற அரசியல்வாதிகள் கொண்ட காட்சி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

அதிக நச்சுப் புகையை வெளிப்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து அழிப்பது, குறிப்பிட்ட ஆண்டுகள் பயன்படுத்திய வாகனங்களை தடை செய்வது, சொகுசு கார்களுக்கான வரியை இரட்டிப்பாக உயர்த்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் சிறப்பானதாக இருக்கும் என்று க்ளைமேக்சில் வசீகரன் பேச வேண்டும்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

பொது போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தி, ஊக்குவிப்பது, மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், அதற்குண்டான சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க முக்கியத்துவம் கொடுப்பது குறித்த காட்சிகளும் இடம்பெறும்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

பொது போக்குவரத்தில் புகை வெளியிடாத வாகன பயன்பாட்டை அதிகரிப்பதும், நச்சுப் புகை வெளியிடாத வாகன கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு சிறப்பு திட்டங்களையும் வகுக்க வேண்டும். என்னதான் அரசு திட்டம் போட்டு நடைமுறை படுத்தினாலும், இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒவ்வொரு மனிதனும் கார், டூ வீலர் வாங்குவதிலும், அதனை தேவைக்கேற்ப பயன்படுத்துவதிலும் மனக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைக்கும் பெரும் செல்வ வளமாக கருத முடியும் என்பது க்ளைமேக்ஸ் வசனம்.

அடுத்து 3.O படம் எடுத்தால் ஷங்கர் நம்ம தலை மேல கை வைப்பாரோ?

சிட்டி இல்லலாமல் 3.O என்கிறீர்களா? இதில் எங்கே சிட்டியை சொருகுவது என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம். வாகன நச்சுப்புகையால் மோசமான காற்று மாசுபாடுடைய நகரத்தில் வாழும் ஒரு 'அந்நியன்' குணத்தை கொண்ட பரமசாது, கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார். சமூகத்தில் மனிதர்கள் செய்யும் அக்கறை இல்லாத செயல்களால், வெறுப்பு காரணமாக பேயாக மாறி வந்து சாலையில் செல்லும் வாகனங்களை எல்லாம் கபளீகரம் செய்கிறார். அந்த வில்லன் பேயை அழிக்க 3.O சிட்டி களமிறக்கப்படுகிறார். லாஜிக் என்று கேட்பவர்களுக்கு விஎஃப்எக்ஸ் மூலமாக அதனை சரிகட்ட முடியும் என்று கூறிக்கொண்டு....

Article Published On: Thursday, November 29, 2018, 17:10 [IST]
English summary
vehicle population and pollution effects on human health
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+