சுழல் விளக்கு தடையால் ஃபேன்ஸி வாகனப் பதிவு எண்களுக்கு அதிகரிக்கும் திடீர் மவுசு..!!

Written By:

இந்தியாவில் சுழல் விளக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஃபேன்ஸி பதிவு எண்களுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

வாகனங்களுக்கான பதிவு எண் பெறுவதில் இரண்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒன்று சாதாரண பதிவு எண், மற்றொருண்று பேன்ஸி ரக பதிவு எண்.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

இதில் பேன்ஸி பதிவு எண்களை கூடுதல் விலை கொடுத்துத்தான் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கென பிரத்யேக ஏலம் உள்ளிட்ட நடைமுறைகளை ஒவ்வொரு மாநிலமும் பின்பற்றி வருகின்றது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகள் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்ட பின்னர், விஐபி அந்தஸ்தை வாகனங்களுக்கு வழங்குவது ஃபேன்ஸி என்களே.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

இந்நிலையில், தற்போது ஃபேன்ஸி என்களை பெறுவதற்கான போட்டி நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

டெல்லியில் கடந்த 2014 முதல் ஃபேன்ஸி என்களுக்கா ஏலம் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 17, 2017 அன்று நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் ஒரு ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் இதுவரை இல்லாத தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

இந்த ஏலத்தில் ‘0001' என்ற பதிவு எண்னை ஏலம் கேட்க 30 பேர் போட்டியிட்டுள்ளனர், இதில் ‘பால்ம் லேண்ட் ஹாஸ்பிடாலிட்டி' என்ற தனியார் நிறுவனம் ரூ.16 லட்சம் கொடுத்து இந்த பதிவு எண்ணை ஏலம் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் ஃபேன்ஸி எண்களுக்கான ஏலத்தில் தற்போது தான் அதிக தொகைக்கு ஒரு ஃபேன்ஸி பதிவு எண் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை கமிஷனர் கே.கே. தாஹியா குறிப்பிட்டார். மேலும் சுழல் விளக்கு பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டவுடன் ஏலம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

டெல்லியில் இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 2014ல் ஃபேன்ஸி பதிவு எண் ஒன்று ரூ.12.5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டதே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பதிவு எண் ஆக இருந்து வந்தது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

மாதம் ஒருமுறை நடக்கும் இந்த ஏலத்தில் இதற்கு முன்னதாக, பிப்ரவரி 2015ல் 0007 என்ற எண் ரூ.10.40 லட்சத்திற்கும், செப்டம்பர் 2015ல் 0009 என்ற எண் ரூ.8.50 லட்சத்திற்கும் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

இந்த ஏலம் முழுவதும் எந்தவித ஒளிவுமறைவுமின்றி ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. பதிவு எண்ணுக்கான தொகை ஆன்லைனிலேயெ செலுத்த வேண்டும், இதற்கான அத்தாட்சி கடிதமும் ஆன்லைனிலேயே அனுப்பிவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புருவத்தை உயர்த்திய ஃபேன்ஸி வாகனப் பதிவு எண் விலை..!!

சுழல் விளக்கு பயன்பாடு ஒழிக்கப்பட்டாலும், ஃபேன்ஸி நம்பர் மூலம் விஐபி கலாச்சாரம் மறைமுகமாக கோலோய்ச தொடங்கியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.

English summary
Read in Tamil about vehicle registration number auctioned for 16 lakh rupees
Story first published: Saturday, June 24, 2017, 13:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark