பெட்ரோல், டீசல் வண்டிகளுக்கு 'செக்' வைத்த மத்திய அரசு! ஏப்ரல் 1 முதல் அதிரடி! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க
பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு 'செக்' வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான (Registration Renewal) கட்டணம் 8 மடங்கு உயரவுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த அதிரடி உத்தரவு அமலுக்கு வருகிறது.

கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு தற்போதைய நிலையில் வெறும் 600 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரும் ஏப்ரல் 1ம் தேதி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார்களின் பதிவை புதுப்பிக்க வேண்டுமென்றால், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். பதிவை புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள கார்களை வைத்திருப்பவர்கள் இதற்கு தயாராகி கொள்வது அவசியம்.

அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு தற்போதைய நிலையில் 5,000 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இறக்குதி செய்யப்பட்ட கார்களின் பதிவை புதுப்பிக்க வேண்டுமென்றால், 40,000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதே சமயம் டூவீலர்களின் பதிவை புதுப்பிப்பதற்கு தற்போதைய நிலையில் வெறும் 300 ரூபாய் மட்டும்தான் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இந்த கட்டணம் 1,000 ரூபாயாக உயரவுள்ளது. இந்த வரிசையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டூவீலர்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணமும் உயர்கிறது.

தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட டூவீலர்களுக்கு 2,500 ரூபாய் மட்டும்தான் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 10,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிக்க தாமதம் செய்தால் ஒவ்வொரு மாதமும் 300 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதுவே வர்த்தக வாகனங்கள் என்றால், பதிவை புதுப்பிப்பதற்கு தாமதம் செய்யும் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய தனியார் வாகனங்களுக்கு (Private Vehicles), ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பதிவை புதுப்பிக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களும், பதிவு நீக்கம் (De-registration) செய்யப்பட்டு விடுவதுதான் இதற்கு காரணம்.

தெளிவாக சொல்வதென்றால், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே அங்கு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையும் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வயதை எட்டும் வாகனங்களை அங்கு பதிவு நீக்கம் செய்து விடுவார்கள்.

எனவே அங்கு பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிக்க முடியாது. இதன் காரணமாகதான் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையும் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையும், பதிவை புதுப்பித்து பயன்படுத்தி கொள்ள முடியும்.

பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் காற்றை அதிகமாக மாசுபடுத்துகின்றன. எனவே அவற்றை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை அரசு உயர்த்தவுள்ளது. காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டண உயர்வையும் கூட இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கலாம். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது மிகவும் ஆர்வமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








