21 நாளில் பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப பெற வேண்டும்! இல்லை என்றால் ஒரு பைசா கூட தேறாது!
தடை செய்யப்பட்ட வாகனத்தை சாலையில் ஓட்டி அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அதன் உரிமையாளர் திரும்ப பெறுவதற்கு மூன்று வாரங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் எனவும், மூன்றாவது வாரத்திற்கு மேலும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் அந்த வாகனம் ஸ்கிராபிற்க்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டில்லியில் நிலவும் கடும் மாசு காரணமாக நாம் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கும் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழமையான பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் அவர்களே தங்கள் வாகனங்களை ஸ்கிராப் செய்து புதிய வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி ஒரு சிலர் பழைய வாகனங்களை தொடர்ந்து டெல்லியில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் டெல்லியில் காற்று மாசு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதற்காக டில்லியில் உள்ள போக்குவரத்து துறை அலுவலர்கள் இப்படியாக தடை செய்யப்பட்ட வாகனங்களை சாலையில் பயன்படுத்தினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி அதிகாரிகளும் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு வாகன உரிமையாளருக்காக காத்திருப்பில் வைக்கப்படும். வாகன உரிமையாளர் அந்த வாகனத்தை ஸ்கிராப் செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்து விட்டு வந்தால் மட்டுமே அந்த வாகனங்கள் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த விதிமுறையில் புதிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளனர்.

அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இனி மூன்று வாரங்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், அதற்குள் வாகனத்தின் உரிமையாளர் உரிய ஆவணத்தை ஒப்படைக்கவில்லை என்றால் அரசே குறிப்பிட்ட வாகனத்தை ஸ்கிராப் செய்ய அனுப்பி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 21 நாட்கள் மட்டுமே வாகனம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல வாகனம் பறிமுதல் செய்யும் பொழுது தடை செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்கு முந்தைய டீசல் வாகனங்கள் அல்லது 15 ஆண்டுகளுக்கு முந்தைய பெட்ரோல் வாகனங்களாக இருந்தால் அந்த வாகனங்களுக்கு சாலையில் விதிமுறைகளை மீறி ஓட்டியதற்காக ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே டூவீலராக இருந்தால் அந்த வாகனத்திற்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக தடை செய்யப்பட்ட வாகனத்தை சாலையில் இயக்கினால் உடனடியாக அது பறிமுதல் செய்யப்பட்டவுடன் அதன் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் உரிமையாளர் அந்த வாகனத்தை ஸ்கிராப் செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்து விட்டு அந்த ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே அவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ஸ்கிராப் செய்யப்பட்ட ஆவணத்துடன் வந்து வாகனத்தை திருப்பி சென்று மீண்டும் அவர் வாகனத்தை சாலையில் பயன்படுத்தினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் அதன் உரிமையாளருடன் திரும்ப ஒப்படைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சட்டங்கள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் தற்போது புதிதாக 21 நாட்கள் மட்டுமே வாகனங்கள் பாதுகாக்கப்படும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதனால் டெல்லி வாசிகள் இனி பழைய வாகனங்களை சாலையில் ஓட்டினால் அந்த வாகனங்கள் 10 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் வாகனமாக இருந்தாலும், 15 ஆண்டுகளுக்கு பழமையான பெட்ரோல் வாகனமாக இருந்தாலும், நிச்சயம் சாலையில் ஓட்டாமல் தவிர்க்க வேண்டும். புதிய வாகனங்களை மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும். பழைய வாகனங்கள் காற்றுக்கு மாசு ஏற்படுத்துவதால் அதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய வாகனங்கள் அதிகம் மாசுவை ஏற்படுத்துவதால் அது சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால் அங்கு வாகனங்கள் குறித்த கட்டுப்பாடு மிக கடுமையாக பின்பற்றப்படுகிறது. அதன் காரணமாகவே இப்படியான கடும் விதிகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








