ஒனர் மாதிரி வந்து 15 நொடியில் ராயல் என்ஃபீல்டு பைக்கையே ஆட்டைய போட்டாங்களே! வைரலாகும் வீடியோ!
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வாகனத் திருட்டு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தொடர்ந்து பல வீடியோக்கள் வாகன திருட்டு குறித்து வெளியாகி வருகின்றன, இதில் திருடர்கள் விரைவான மற்றும் திறமையான முறையில் வாகனத்தை திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக இரவில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் போது இந்த திருட்டு நடக்கிறது. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ஒரு திருடன் சில விநாடிகளில் ஒரு புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒரு பார்க்கிங்கில் இருந்து திருடுவது பதிவாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் "ட்ரோல்ஸ் ஆஃபிஷியல்" பக்கம் மூலம் பகிரப்பட்டது. இது பார்க்கிங் ஏரியாவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் ஆகும். இது உத்தரப்பிரதேசத்தில் நடந்திருந்தாலும், துல்லியமான எந்த இடத்தில் நடந்தது என்ற விபரம் தெரியவில்லை. இந்த காட்சிகள் திருடர்கள் எவ்வளவு விரைவாகவும் திறமையாகவும் செயல்பட முடியும் என்பதை காட்டுகின்றன.

இந்த காட்சியில், ஒரு கேப் மற்றும் முகமூடி அணிந்த ஒரு மனிதன், பார்க் செய்து வைக்கப்பட்ட ஒரு ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்கிற்கு அருகில் வருகிறார். ஒரு கருவி எடுத்துக்கொண்டு, அதை பைக்கின் சாவி போடும் இடத்தில் செருகி, ஒரு சாதாரண சாவியைப் போல சுழற்றுகிறார். ஆச்சரியப்படும் விதமாக, பைக் அன் லாக் ஆகிவிடுகிறது. பைக்கின் பைலட் விளக்குகள் ஒளிர்கின்றன. சில விநாடிகளில், அவர் ஹேண்டில் லாக்கை ஒப்பன் செய்து, பைக்கை பின்னோக்கி தள்ளி, ஸ்டார்ட் செய்து, ஓட்டிச் செல்கிறார்.
இந்த முழு செயலும் 15 வினாடிகளுக்குள் நடந்து முடிந்தது. வீடியோவின் கமெண்ட் பிரிவில் பார்வையாளர்களிடமிருந்து வெவ்வேறு எதிர்வினைகள் வருகின்றன. சில கமெண்ட்கள் கேலிக்கூத்தாக இருக்கிறது, மற்றவை பாதுகாப்பு குறித்த உண்மையான கவலையை வெளிப்படுத்தும் விதமாக இருகு்கிறது. "இத்தனை வேகமா நான் அசல் சாவியைப் பயன்படுத்தி கூட திறக்க முடியாது", என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த வீடியோ, திருடர்கள் அவர்களைச் சுற்றியுள்ள சூழலை எவ்வளவு கவனமாக கவனித்து, எந்த கவனத்தையும் ஈர்க்காமல் எவ்வளவு வேகமாக செயல்பட முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. திருடர்கள் பொதுவாக ஒரு வாகனத்தில் அதிக நேரம் செலவிடாமல் தவிர்க்கிறார்கள். ஏனெனில் அவர்களை கடந்து செல்பவர்கள் கவனிக்கக்கூடும் என்ற ஆபத்தும் உள்ளது.
ஒரு வாகனத்தை விரைவாக உடைக்க முடியாவிட்டால், அவர்கள் பொதுவாக அதை விட்டுவிட்டு வேறு இலக்குக்கு செல்கிறார்கள். இந்த விஷயத்தில், ராயல் என்ஃபீல்டுக்கு ஹேண்டில் லாக் மட்டுமே இருந்தது, இது திருட்டிற்கு எளிதான இலக்காக மாறியது. இதனால் சுலபமாக இந்த வாகனத்தை திருட முடிந்தது.

பல பாதுகாப்பு லாக்குளை நிறுவுவது மூலம் இந்த திருட்டை தடுத்து இருக்கலாம். டிஸ்க் லாக் இந்த விஷயத்தில் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை வீல்கள் சுழல்வதைத் தடுக்கின்றன மற்றும் ஹேண்டில் லாக்கை விட உடைக்க கடினமாக இருக்கும். இந்த கூடுதல் கடினம், திருடர்களை இத்தகைய பாதுகாப்புள்ள வாகனங்களை திருட முயற்சிப்பதை தடுக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: திருடப்பட்ட பைக் புதியதாகவும், இரு முனைகளிலும் பதிவு எண்கள் இல்லாமல் இருந்தது. இந்த பைக்கின் உரிமையாளர் இந்த விஷயத்தை புகாரளித்து இருப்பார் மற்றும் அவர் விரைவில் தனது மோட்டார் சைக்கிளை மீட்டிருப்பார் என நம்புவோம். ஆனால் நம்பர் பிளேட் கூட இல்லாத பைக்கை எப்படி கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்பது சவாலான விஷயம் தான். இதற்கான இன்சூரன்ஸ் கிடைப்பது கடினம் தான்.


Click it and Unblock the Notifications









