இனி கார்களில் இதை மாட்ட வேண்டும்! ஒரு சின்ன விபத்துக்கூட நடக்காது!
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது வெஹிகிள் டூ வெஹிகிள் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு இந்தியாவில் வாகன விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க புதிய தொழில்நுட்பம் ஒன்றை கொண்டு வருகிறது.வெஹிகிள் டூ வெஹிகிள் கம்யூனிகேஷன் தொழில்நுட்பம் என பெயர் வைத்துள்ளது. இதை 2026ம் ஆண்டு இறுதிக்குள்ளேயே அமலுக்கு கொண்டுவர யோசித்து வருகிறது. இந்த தொழிற்நுட்பம் மூலம் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் தானாகவே தொடர்பு கொண்டு விபத்துக்களை தவிர்க்க உதவும்.

இன்னும் தொழில்நுட்பத்தின் படி வாகனங்களில் இதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கருவிகள் ஒரு வாகனத்தை மற்றொரு வாகனத்துடன் தொடர்பு கொள்ளும் இதற்காக எந்த மொபைல் நெட்ஒர்க்கோ இன்டர்நெட் இணைப்பு தேவை இல்லை. அங்கு லோக்கல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி அதன் மூலமே இந்த தொடர்பை ஏற்படுத்தும் இதன் மூலம் அருகில் வரும் வாகனங்கள் குறித்த தகவல்கள் டிரைவருக்கு கிடைக்கும் இதனால் வாகனம் விபத்தில் சிக்க போகும் அபாயம் ஏற்பட்டால் உடனடியாக இது குறித்து டிரைவருக்கு அலர்ட் ஏற்படுத்தும்.
இதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் அதி வேகமாக வாகனங்கள் பயணிக்கும் போது, பின்னால் வரும் வாகனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் வாகனங்களை பார்க்கிங் செய்யும்போதும், இந்த தொழிற்நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் விபத்துக்கள் குளிர்காலங்களில் பணி அதிகமாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருக்கும்போது ஏற்படும் விபத்துக்கள் ஆகியவற்றை தவிர்க்க இந்த தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு இந்த தொழிற்நுட்பத்தை விரைவில் பயன்பாடுக்கு கொண்டுவர தீவிரமாக என முயற்சியை கையில் எடுத்துள்ளது.

சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களுடன் ஒரு வருடாந்திர கூட்டத்தில் பேசினார். அப்பொழுது இவர் இந்த தொழிற்நுட்பம் குறித்து பேசினார். மத்திய அரசு விரைவில் இதை அமலுக்கு கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் அமலுக்கு வந்தால் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது வேகமாக வரும் வாகனங்கள் விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும் எனவும் இதனால் விபத்து மரணங்கள் குறையும் எனவும் பணி நேரத்தில் அதிக பனிமூட்டம் காரணமாக ஏற்படும் விபத்துக்கள் குறையும் எனவும் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் விபத்து சிக்குவது குறையும் எனவும் கூறினார். இப்படியான காரணங்கள் தான் விபத்து ஏற்பட அதிகமான காரணங்களாக இருப்பதால் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் விபத்து எண்ணிக்கையையும் விபத்தால் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கூட்டத்தில் பேசிய போது பஸ்களில் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விபரங்களையும் பேசியுள்ளார். இதன்படி கடந்தாண்டு இந்தியா முழுவதும் 5 பஸ் விபத்துக்கள் மிக மோசமான பஸ் வடிவமைப்பு காரணமாக நடந்துள்ளதாகவும் இதனால் 135 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் பஸ் பாடி கட்டமைப்பில் சில மாற்றங்களை கொண்டுவர இருப்பதாகவும், கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முக்கியமாக பஸ்கள் தீ விபத்து ஏற்படும்போது அதில் தீயணைப்பு கருவிகள் பஸ் டிரைவர் தூங்கும் போது கண்காணிக்கும் கருவிகள் மற்றும் பஸ்க்குள் பயணிகள் சிக்கிவிட்டால் அவர்கள் தப்பிப்பதற்கான கருவிகள் ஆகியவற்றை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த திட்டத்திற்காக ரூபாய் 5000 கோடி செலவாகும் என நேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட் ஒதுக்கப்பட்டு இந்த திட்டம் உலக அளவில் வேறு எந்த நாடும் இல்லாத அளவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். இது தயாரினால் நிச்சயம் இந்தியா மிகப்பெரிய அளவில் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற நாடாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மக்கள் தொகை காரணமாக விபத்துக்கள் அதிக அளவில் நடக்கிறது. அதிக மக்கள் தற்போது பயணங்களை விரும்புகிறார்கள் இந்நிலையில் இப்படியான வெஹிகிள் டூ வெஹிகிள் கம்யூனிகேஷன் சிஸ்டம் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சாதனையாகும் இதை சாத்தியப்படுத்தி காட்டினால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விபத்துக்கள் குறையும்.


Click it and Unblock the Notifications









