மெக்கானிக்குகள் எல்லாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க!! எந்த மாநில அரசும் இதையெல்லாம் சொல்லாது!
நடுரோட்டில் வாகனங்கள் தீப்பற்றி எரிவது அவ்வப்போது போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் புதியதொரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்பதையும், இந்த தீ விபத்துகளுக்கு தமிழக அரசு எதை காரணமாக கூறுகிறது என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நம் இந்தியா ஓர் வெப்பமிகுந்த நாடாகும். நம் நாட்டில் ஒரு சில பகுதிகள் குளிர் பிரதேசங்களாக இருப்பினும், பெரும்பாலான பகுதிகள் வெப்ப மண்டலமாகவே காட்சி தருகின்றன. அதிலிலும், தற்போது கோடை காலத்தில் சூரியனின் வெப்பம் இன்னும் உக்கிரமாக உள்ளது. இதன் காரணமாகவே, சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்கள் அவ்வப்போது தீடீரென தீப்பற்றி கொள்கின்றனர்.

குறிப்பாக, கார்கள் தீப்பற்றி கொள்வதை அடிக்கடி சாலையில் காண முடிகிறது. வாகனங்கள் தீப்பற்றி கொள்வதினால், வாகனத்தின் உரிமையாளருக்கு பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி, போக்குவரத்தும் பாதிக்கிறது. வாகனங்களை முறையாக பராமரித்தால், இவ்வாறான தீப்பிடிப்பு சம்பவங்கள் ஏற்படாது என நாங்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், அதனையும் தாண்டி சில தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.
இந்த நிலையில், சாலைகளில் தீப்பற்றி எரியும் வாகனங்கள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து ஆணையர் அ. சண்முக சுந்தரம் இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, அண்மை காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரிவதினால் ஏற்படும் தீ விபத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த விபத்துகள் பற்றி ஆய்வு செய்த போது, மோட்டார் வாகனங்களில் மாடிஃபிகேஷன்களை செய்யும்போது, குறிப்பாக சிஎன்ஜி, எல்பிஜி போன்றவற்றை மாற்றும்போது அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதி இல்லாத நிறுவனங்களால் அந்த பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. இதனாலேயே வாகனங்கள் தீ விபத்துகளுக்கு உள்ளாகின்றன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் (RTO) உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றம் ஆகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோல்/ டீசல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களில் அதிக தீ விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், நாம் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கியே சென்றுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால், எலக்ட்ரிக் வாகனங்களில் தீப்பிடிப்பு நிகழ்வுகளை குறைக்க புதிய தொழிற்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனங்கள் தீப்பிடிப்பது அரிதாக நிகழக்கூடியதுதான் என்றாலும், சாலையில் வாகனங்கள் தீப்பிடித்தால் அது மக்களை அதிக அளவில் பயமுறுத்துகின்றன. காரில் செல்வதா அல்லது வேண்டாமா என்கிற அளவிற்கு கார் ஓட்டிகள் மத்தியில் கேள்வி எழுகிறது. என்ஜின் கூலிங், ஆயில் கூலிங் என பல்வேறு தொழிற்நுட்ப கருவிகள் பயன்பாட்டிற்கு வந்த போதிலும் இந்த தீப்பிடிப்பு சம்பவங்களை குறைக்க முடியவில்லை.
ஆதலால், முடிந்தவரையில் அனுபவமில்லாத மெக்கானிக்குகளிடம் வாகனங்களை சர்வீஸ் செய்ய வேண்டும். சின்ன, சின்ன பிரச்சனைகள் என்றால் பரவாயில்லை... ஆனால், அதுவே வாகனத்தின் என்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் உள்ளிட்ட முக்கிய பாகங்களில் பழுது ஏற்படும்போது முறையான, அனுபவமிக்க சர்வீஸ் செண்டர்களை அணுகுவது நல்லது. இதைதான் நம் தமிழ்நாடு அரசும் பரிந்துரைக்கிறது.


Click it and Unblock the Notifications








