பேருந்தைபோல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்காமல் போகுமா? அப்படி போனால் என்ன ஆகும்? கேரளாவில் அரங்கேறிய சம்பவம்!
கேரளாவில் ஓர் விநோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ரயில் ஒன்று நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற சம்பவமே அது ஆகும். ஒரு கிமீட்டர் வரை தாண்டி சென்று விட்டு பின்னர் மீண்டும் அதே ரயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி செல்வதற்காக அந்த ரயில் ரிவர்ஸிலேயே வந்திருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
காமெடி ஆக்டர் விவேக், ஓர் படத்தில், பேருந்திற்காக அனைவரும் பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்க, அவர் மட்டும், நிறுத்தத்தை விட்டு சில அடிகள் தள்ளி சென்று நிற்பார். பேருந்துகள் முறையாக நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல் செல்வதையும், நிறுத்தும் இடத்தைத் தாண்டி சென்று பேருந்துகள் நிறுத்தப்படுவதையும் கிண்டலடிக்கும் விதமாக விவேக்கின் செயலும், அந்த காட்சிகளும் அமைந்திருக்கும்.

இதே மனப்பான்மையே நம்மில் பலருக்கு பேருந்து பற்றி இருக்கின்றது. அதாவது, பேருந்துகள் மட்டுமே ஒழுங்காக பேருந்து நிறுத்தங்களில் நிற்காது என்கிற எண்ணம் நம்மில் பலரிடையேக் காணப்படுகின்றது. இந்தமாதிரியான சூழ்நிலையில் ரயில் ஒன்று ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற நிகழ்வு நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது.
இந்த விநோத நிகழ்வு நமது அண்டை மாநிலமான கேரளாவிலேயே அரங்கேறி இருக்கின்றது. மாநிலத்தின் முக்கிய பகுதிகளை இணைக்கும் ஓர் புகழ்பெற்ற ரயிலாக வேநாட் எக்ஸ்பிரஸ் (Venad Express) இருக்கின்றது. இந்த ரயிலே ஆலப்புழாவில் உள்ள செரியநாடு எனும் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றிருக்கின்றது.

இது ஓர் டி கிரேட் ரயில் நிலையம் ஆகும். பெரிய அளவில் மக்கள் கூட்டம் இங்கு இருக்காது. மாவேலிக்கரா மற்றும் செங்கண்ணூர் எனும் முக்கிய ரயில் நிலையங்களுக்கு இடையில் அந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை காலை சுமார் 7.45 மணி அளவில் 16302 என்ற எண் கொண்ட வேநாடு எக்ஸ்பிரஸ் வந்தடையும்.
இதன் பின்னர் பயணிகளை ஏற்றிச் சென்றுக் கொண்டு சில நிமிடங்களிலேயே புறப்படும். சம்பவ தினத்தன்று வழக்கத்திற்கு மாறாக அந்த ரயில், நிலையத்தை நெருங்கிய பிறகும் அதிக வேகத்தில் இயங்கி இருக்கின்றது. மேலும், நிலையம் வந்த பிறகும் அது வேகமாகச் சென்று ஸ்டேஷனைக் கடந்திருக்கின்றது.

இதனால், ரயிலில் இருந்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. என்ன நடக்கின்றது என்பதே புரியாமல் இருந்திருக்கின்றனர். சிலருக்கு, நம்முடைய ரயில் கடத்தப்பட்டு விட்டதோ என்கிற எண்ணம் எல்லாம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதே குழப்பத்துடனேயே ரயிலுக்காக காத்திருந்தோரின் மனநிலையும் இருந்திருக்கின்றது.
இவர்களுக்கு மட்டுமல்ல ரயில் நிலைய ஊழியர்களுக்கும் இதுமாதிரியான நினைப்பே ஏற்பட்டிருக்கின்றது. இதை அடுத்தே ரயிலைத் தொடர்புக் கொண்டபோது குழப்பத்தினால் ரயில் அந்த நிலையத்தில் நிற்காமல் சென்றது தெரிய வந்தது. ரயில் நிலையத்தில் ரயில் நிற்க வேண்டும் எனில் அந்த குறிப்பிட்ட ஸ்டேஷனில் பைலட்டுகளுக்கு சிக்னல் காண்பிக்க வேண்டும்.
இந்த செயலில் சிக்கல் ஏற்பட்டதே ரயில், நிலையத்தில் நிற்காமல் சென்றதற்கான முதன்மையான காரணம் என கூறப்படுகின்றது. ஆனால், சிறிய ரயில் நிலையம் என்பதால் இதுமாதிரியான எந்த சிக்னலும் இங்கு இருக்காது. பைலட்டுகளின் கவனக் குறைவாலேயே இந்த நிகழ்வு அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆகையால், இந்த விஷயத்தில் லோகோ பைலட்டிடம் முறையான காரணம் கேட்டு ரயில்வேத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. சுமார் 700க்கும் மீட்டருக்கும் அதிகமான தூரம் ரயில் நிலையத்தைத் தாண்டி ரயில் சென்றிருக்கின்றது. பின்னர் அங்கிருந்து ரிவர்ஸிலேயே ரயில் வரவழைக்கப்பட்டு, பயணிகள் மீண்டும் ஏற்றப்பட்டிருக்கின்றனர்.
தொடர்ந்து, அந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் இறக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், அந்த ரயில் 8 நிமிடம் கால தாமதாக மற்ற நிலையங்களுக்கு செல்ல நேரிட்டது. இந்த நிகழ்வால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வேஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், உரிய காரணம் கேட்டு பைலட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேருந்தைபோல் ரயில்கள் ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல் சென்றால் என்னவாகும் என்பதையும் வெளிக்காட்டும் வகையிலேயே கேரளாவில் அரங்கேறிய இந்த சம்பவம் அமைந்துள்ளது. மேலம், நாட்டிலேயே இதனை முதல் முறை என கூறலாம்.இதற்கு முன்னதாக திரைப்படங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகளை நாம் பார்த்திருப்போம்.


Click it and Unblock the Notifications
