46 லட்ச ரூபா கொடுத்து ஃபேன்சி நம்பர் பிளேட் வாங்கிய ராசியா!! புது கார்கள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாயில் இருக்கு

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, ஜி63 ஏஎம்ஜி (G63 AMG) ஆகும். சுமார் ரூ.4.2 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஏஎம்ஜி காரை வாங்குவது என்பது பணக்காரர்களுக்கு கூட கனவாக உள்ளது. இப்படிப்பட்ட காரை கேரளாவை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் வாங்கியுள்ளார். தாய், தந்தை, மனைவி மற்றும் மகன் உடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் இந்த கேரள தொழிலதிபரை பற்றி சமீப காலமாக அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம்.

அந்த அளவிற்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது அளப்பறியா ஆவலுடன் இருக்கும் இந்த கேரள தொழிலதிபர் சமீப மாதங்களாக வரிசையாக புது, புது சொகுசு கார்களை வாங்கியப்படி உள்ளார். கேரளாவின் கொச்சியில் 'லிட்மஸ்7' (Litmus7) என்கிற ஐடி நிறுவனத்தை நடத்திவரும் இந்த தொழிலதிபரின் பெயர், வேணு கோபாலகிருஷ்ணன் ஆகும். நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் சமீப வாரங்களாக இந்த பெயரை அடிக்கடி கேட்டு வருகிறோம்.

venu gopalakrishnan buys ultra-luxury car

இந்தியாவிலேயே அதிக தொகையை செலவு செய்து ஃபேன்சி நம்பர் பிளேட் (Fancy Number Plate)-ஐ வாங்கியவர் இந்த தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் ஆவார். அதன் மூலமாக இந்திய அளவில் கவனத்தை பெற்ற இந்த கேரள தொழிலதிபர் தனது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்காக '0007' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை சுமார் ரூ.46 லட்சம் செலவு செய்து வாங்கினார்.

இந்த செய்தி அடங்குவதற்குள், இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் (Rolls-Royce Series-2 Black Badge) என்கிற சுமார் ரூ.10.51 கோடி மதிப்பிலான அல்ட்ரா-லக்சரி காரை வாங்கி தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் மேலும் அதிர்ச்சி கொடுத்தார். ரூ.10.51 கோடி என்பது இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக வரும்.

venu gopalakrishnan buys ultra-luxury car

கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதற்குள்ளாக வாங்கிய வேணு கோபாலகிருஷ்ணன் தற்போது மற்றொரு அல்ட்ரா-லக்சரி காரை வாங்கியுள்ளார். அதுதான், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஆகும். சமீபத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்க சென்றதை போன்று, இந்த மெர்சிடிஸ் காரையும் தாய், தந்தை, மனைவி மற்றும் மகன் என குடும்பமாக சென்று தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் டெலிவிரி பெற்றுள்ளார்.

ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக மட்டும் சுமார் ரூ.46 லட்சம் செலவு செய்யப்பட்ட லம்போர்கினி உருஸ் காரில் குடும்பத்துடன் கார் டெலிவிரி பெறும் இடத்திற்கு தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் வந்தார். ஆனால், அவர் புக் செய்த மெர்சிடிஸ் ஜி63 ஏஎம்ஜி காரும் லாரியில் கொண்டுவரப்பட்டுள்ளதால், கார் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது ஷோரூமுக்கு சொந்தமான இடத்திலோ அல்லது தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்திலோ இருக்கலாம்.

காரை டெலிவிரி பெறுவதற்கு முன்னர் சில ஆவணங்களில் வேணு கோபாலகிருஷ்ணன் கையெழுத்திடுவதை இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. சாடின் மிலிட்டரி க்ரீன் என்கிற நிறத்தில், பளபளப்பான கருப்பு நிறத்திலான அலாய் சக்கரங்கள் உடன் பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கியுள்ளார்.

வாகனத்தின் உட்புறத்தில் கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. பின் இருக்கை வரிசையில் அமர்பவர்களுக்கும் இரு பொழுதுப்போக்கு திரைகள் உடன் இந்த வாகனத்தை வேணு கோபாலகிருஷ்ணனன் தேர்வு செய்துள்ளார். 2025 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரில் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 585 பிஎச்பி மற்றும் 850 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் கார்கள் பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் என மூன்று விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் காரின் ஏஎம்ஜி வெர்சன் தான், ஏஎம்ஜி ஜி63 ஆகும். ஜி-கிளாஸின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.50 கோடி என்கிற அளவில் இருக்கும் நிலையில், அதன் ஏஎம்ஜி வெர்சனின் விலை சுமார் ரூ.4 கோடி அளவில் உள்ளது. இத்தகைய விலையுயர்ந்த காரை தான் தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனன் வாங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, June 2, 2025, 5:00 [IST]
English summary
Venu gopalakrishnan buys again one ultra luxury car mercedes amg g63
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+