அத்தனை பேர் சொல்லியும் கேட்காம விடாப்பிடியா வாங்கிய கார்! விலையை கேட்டால் மயக்கம் வந்துடும்!
ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்-2 (Rolls-Royce Ghost Series-2) காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளதை சில தினங்களுக்கு முன்னர் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். உலகளவில் பிரபலமான ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் அடுத்த தலைமுறை மாடலாக கோஸ்ட் சீரிஸ்-2 கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக முதல் கஸ்டமராக டெலிவிரி பெற்றிருக்கும் இந்த கேரள தொழிலதிபரின் பெயர், வேணு கோபாலகிருஷ்ணன் (Venu Gopalakrishnan) ஆகும்.
கேரளாவின் கொச்சியில் லிட்மஸ்7 (Litmus7) என பெயர் கொண்ட ஐடி நிறுவனத்தின் சிஇஓ ஆக விளங்கும் வேணு கோபாலகிருஷ்ணன், சமீப காலமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறார். சில மாதங்களுக்கு முன், இந்தியாவிலேயே அதிக விலையில் ரூ.46 லட்சத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட்டை தனது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்காக இவர் வாங்கியது இந்திய அளவில் கவனத்தை பெற்றது.

அதனை தொடர்ந்து, ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்-2 காரை தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் டெலிவிரி பெற்றார். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஏன் வாங்கினேன் என்பது குறித்து இந்த கேரள தொழிலதிபர் தற்போது கூறியுள்ளதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இதுதொடர்பாக, பய்ஜு என் நாயர் என்பவர் தனது யூடியூப் சேனலில் வேணு கோபாலகிருஷ்ணன் உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் (Phantom) காரை காட்டிலும் கோஸ்ட் சீரிஸ்-2 காரை எதற்காக வாங்குனீர்கள் என பய்ஜூ என் நாயர் கேட்ட கேள்விக்கு, ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது எனது கனவு என்றும், அதனை ஸ்டைலுக்காக ஓட்டுவதை விட அடிக்கடி ஓட்டுவதற்கு ஏற்றதாக வாங்க வேண்டும் என்பதும் தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனின் ஆசையாக இருந்துள்ளது.

இதற்கேற்றப்படி, சிறந்த டைனாமிக் பண்புகளை கொண்ட ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்க இவர் விரும்பியுள்ளார். இருப்பினும், ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் கார் இவரது விருப்பத்தில் இல்லை. பாண்டோம் ஆனது ரோல்ஸ்-ராய்ஸ் விற்பனை செய்யும் மிகவும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று. இதனாலேயே, பாண்டோம் கார்களில் சவுகரியம், பாதுகாப்பு, செயல்படுதிறன் என எல்லா விஷயங்களும் அதிகப்பட்ச நிலையில் வழங்கப்படுகின்றன.
ஆனால், இவ்வாறு எல்லாமே அதிகப்பட்ச நிலையில் வழங்கப்படுவதினால்தான் பாண்டோம் காரில் ஜாலியான பயணத்தை பெற முடிவதில்லை என்பது தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனின் கருத்தாக உள்ளது. அதாவது, விரும்பும் நேரத்தில் எளிதில் திருப்பக்கூடிய, கண்ட்ரோல் செய்வதற்கு இலகுவான காரை இந்த தொழிலதிபர் விரும்பியுள்ளார். அதாவது, சாதாரணமான கார்களை போன்று பெரியதாக சிரமம் இல்லாமல் ஹேண்ட்லிங் செய்யக்கூடிய காரை ரோல்ஸ்-ராய்ஸ் பிராண்டில் வேணு கோபாலகிருஷ்ணன் எதிர்பார்த்துள்ளார்.
அதன்படி, அவர் வாங்கியிருப்பதுதான் கோஸ்ட் சீரிஸ்-2 கார் ஆகும். பழைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் கூட இன்றைய கால கார்களுக்கு சவால் அளிக்கும் அளவிற்கு மாடர்ன் தரத்தில் இருக்கும் நிலையில், கோஸ்ட் சீரிஸ்-2 ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்றதும் வேணு கோபாலகிருஷ்ணன் கவரப்பட்டுள்ளார்.
இதற்கேற்ப, பவர்ஃபுல்லான என்ஜின் உடன் சிறப்பான ஹேண்ட்லிங்கை வழங்கக்கூடியதாக புதிய கோஸ்ட் சீரிஸ்-2 கார் உருவாக்கப்படுகிறது. இதனால், விடுமுறை நாட்களில் ஜாலியான பயணத்திற்கு ஏற்ற காராக கோஸ்ட்-2 இருப்பதாக கூறும் வேணு கோபாலகிருஷ்ணன், பாண்டோம் கார் அளவில் பெரியதாக இருப்பதால் எதிர்காற்றுக்கு ஏற்ப அவற்றை ஹேண்ட்லிங் செய்வது சற்று சிரமமானதாக உள்ளதாக தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது முழுக்க முழுக்க கேரள தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனின் தனிப்பட்ட கருத்து ஆகும். ஏனெனில், ஒரு சிலருக்கு கோஸ்ட் காரை காட்டிலும் பாண்டோம் காரை ஓட்டுவதற்கு பிடித்திருக்கும். பாண்டோம் காரை வாங்க வேண்டாம் என முடிவு செய்த பின், ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) அல்லது கோஸ்ட் சீரிஸ்-2 கார்களில் ஒன்றை வாங்கலாம் என முடிவு செய்து, கோஸ்ட் சீரிஸ்-2 காரை இவர் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








