முதல் புகாட்டி வேரான் கார் பெரும் தொகைக்கு ஏலம்!!

Written By:

உலகின் அதிவேக கார் என்ற பெருமைக்குரிய மாடல் புகாட்டி வேரான். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட்ட இந்த கார் உலக கோடீஸ்வரர்களின் கனவு மாடல்களில் ஒன்றாக கருதப்பட்டது.

இந்தநிலையில், அனைத்து புகாட்டி வேரான் கார்களும் சமீபத்தில் விற்று தீர்ந்தது. இதனால், இந்த கார்களுக்கான மறு விற்பனை மதிப்பு ஏகத்துக்கும் கூடியிருக்கிறது. இந்த சூழலை பயன்படுத்தி, முதலாவது புகாட்டி வேரான் கார் சமீபத்தில் நடந்த ஏலத்தில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.

கருப்பு- சிவப்பு

கருப்பு- சிவப்பு

முதல் புகாட்டி வேரான் கார் கருப்பு- சிவப்பு வண்ணக் கலவை கொண்டது. மல்டி ஸ்போக்ஸ் கொண்ட சக்கரங்களை கொண்டது.

ஓடோமீட்டர் ரீடிங்

ஓடோமீட்டர் ரீடிங்

இந்த கார் வாங்கிய தினத்திலிருந்து இதுவரை வெறும் 1,230 கிமீ தூரம் வரை மட்டுமே ஓடியிருக்கிறது. சமீபத்தில்தான் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

புகாட்டி வேரான் காரில் 1,000 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்ட டபிள்யூ16 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி சீக்குவன்ஷியல் கியர்பாக்ஸ் கொண்டது. மேலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

அடையாள பட்டை

அடையாள பட்டை

ஒவ்வொரு புகாட்டி வேரான் காரிலும், அது எத்தனையாவது கார் என்பதை குறிப்பதற்காக பட்டை கொடுக்கப்பட்டிருக்கும். ஏலத்தில் விற்பனையான முதல் காரின் அடையாள பட்டையை காணலாம்.

விலை

விலை

1.8 மில்லியன் டாலர் விலை மதிப்பில், முதலாவது புகாட்டி வேரான் கார் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த காருடன் மற்றொரு புகாட்டி வேரான் காரும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வழித்தோன்றல்...

வழித்தோன்றல்...

புகாட்டி வேரான் சூப்பர் காரின் வழித்தோன்றலாக, சிரான் என்ற சங்கேத பெயரில் அழைக்கப்படும் புதிய ஹைப்பர் கார் மாடலை புகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் இந்த புதிய காரின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் இந்த காரை தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு பார்வைக்கு வழங்க இருக்கிறது. 2017ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The very first Bugatti Veyron that was ever manufactured has been sold at the Monterey Auction for USD 1,815,000!
Story first published: Wednesday, August 19, 2015, 9:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark