ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த மனுஷன்! ஆனா இப்ப கொஞ்ச தூரம் நடந்து வந்து கார்ல ஏறவே ரொம்ப கஷ்டப்பட்றாரு!
இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) காருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் காரை வைத்துள்ளனர். இளம் நடிகர்கள் மற்றும் மூத்த நடிகர்கள் என வயது வித்தியாசமின்றி ரேஞ்ச் ரோவர் காரை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப விலையே 2.40 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4.98 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மிகவும் விலை உயர்ந்தது என்றாலும் கூட, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் காரை தங்களுடைய அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர். சொகுசு மற்றும் செயல்திறன் ஆகிய 2 மிக முக்கியமான அம்சங்களும் கலந்து கட்டிய கலவையாக ரேஞ்ச் ரோவர் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ரேஞ்ச் ரோவர் காரை திரையுலக நட்சத்திரங்கள் பெரிதும் விரும்புகின்றனர். கடந்த காலங்களில் இளம் நடிகர், நடிகைகள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்களை பயன்படுத்தியது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் நீங்கள் வாசித்திருக்கலாம். இந்த வரிசையில் மூத்த நடிகர் ஒருவர் ரேஞ்ச் ரோவர் காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான தர்மேந்திரா (Dharmendra) ஆவார். 89 வயதாகும் இவருக்கு தற்போது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ரேஞ்ச் ரோவர் காரில் தர்மேந்திரா புறப்பட்டபோதுதான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் வளாகத்தில் இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரா கடந்த 1960ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமாகி சுமார் 55 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தற்போதும் அவர் நடிப்பதை நிறுத்தவில்லை.
இன்னமும் திரைப்படங்களில் அவர் நடித்து கொண்டுதான் உள்ளார். நடிகர் என்பதை கடந்து அரசியல்வாதி என்ற முகமும் கூட தர்மேந்திராவிற்கு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தர்மேந்திரா தற்போது பயன்படுத்தியது ரேஞ்ச் ரோவர் கார் என்றாலும் கூட, இது அந்த காரின் என்ன வேரியண்ட்? என்பது சரியாக தெரியவில்லை.
தர்மேந்திரா இன்று தனது கடின உழைப்பின் மூலம் மிகவும் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் போன்ற கார்களில் பயணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் அவரது முதல் கார் எது? என உங்களுக்கு தெரியுமா? ஒரு காலத்தில் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த ஃபியட் 1100 (Fiat 1100) கார்தான், தர்மேந்திராவின் முதல் கார் ஆகும்.
கடந்த 1960ம் ஆண்டு தர்மேந்திரா இந்த காரை வாங்கினார். அப்போது இந்த காரின் விலை 18 ஆயிரம் ரூபாய் ஆகும். அந்த கால கட்டத்தில் 18 ஆயிரம் ரூபாய் என்பது உண்மையிலேயே பெரிய தொகைதான். தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு கார்களில் பயணம் செய்தாலும், இன்னமும் கூட தனது முதல் காரை தர்மேந்திரா வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ஏதாவது ஒரு சமயத்தில் என்னிடம் எதுவும் இல்லாமல் போனால், இந்த காரை டாக்ஸியாக மாற்றி பிழைத்து கொள்வேன் என தர்மேந்திரா ஒரு முறை வேடிக்கையாக குறிப்பிட்டது இங்கே நினைவு கூறத்தக்கது. தர்மேந்திராவின் ஃபியட் 1100 காரில், 1,089 சிசி 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 36 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் இந்த சக்தியானது, 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலமாக, காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. தர்மேந்திராவின் மனதிற்கு நெருக்கமானது என்பதால், இன்னமும் அவரது வீட்டின் கராஜை இந்த கார் அலங்கரித்து கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மூத்த நடிகரான தர்மேந்திராவிற்கு தற்போது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேஞ்ச் ரோவர் காரின் தீவிர ரசிகரான தர்மேந்திரா, விரைவில் குணமடைந்து இன்னும் நீண்ட காலம் திரைத்துறைக்கு அவரது பங்களிப்பை வழங்க வேண்டும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் விரும்புகிறது.
முன்னதாக தற்போது பரவி வரும் வைரல் வீடியோவில், மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து நடந்து காருக்கு வருவதற்கு தர்மேந்திரா சிரமப்படுவதை நம்மால் காண முடிகிறது. அவருடன் துணைக்கு ஒருவர் வருகிறார். இருப்பினும் இந்த வைரல் வீடியோவில், 'நான் வலிமையாக உள்ளேன்' என தர்மேந்திரா கூறுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








