மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் புதியதாக கருப்பு நிறத்தில் மஹிந்திரா தார் வாகனத்தை சொந்தமாக வாங்கியுள்ளார். இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

நடிகர் பிரகாஷ் ராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். சிங்கம், கில்லி உள்ளிட்ட வெற்றி படங்களில் வில்லனாக மிரட்டியிருந்தவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் OTT-இல் வெளியாகி பல தரப்பட்ட மக்களின் பாராட்டுகளை பெற்றுவரும் ஜெய்பீம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

இவர் எந்த அளவிற்கு தென்னிந்திய சினிமா துறையில் பிரபலமாக உள்ளாரோ அந்த அளவிற்கு இந்திய ஆட்டோமொபைல் துறையில் மஹிந்திராவின் தார் வாகனமும் பிரபலமானதாக விளங்குகிறது. இந்த இரு ஐகானிக் அடையாளங்கள் தான் தற்போது இணைந்துள்ளன. ஹைதராபாத்தில் உள்ள டீலர்ஷிப் ஒன்றில் நபோலி கருப்பு நிறத்தில் மஹிந்திரா தார் வாகனத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் டெலிவிரி பெற்றுள்ளார்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

இவர் வாங்கியிருப்பது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் தாரின் டாப் எல்.எக்ஸ் ட்ரிம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் புதிய தலைமுறை தார் எஸ்யூவி வாகனத்தை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் மஹிந்திரா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகப்படுத்தியது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றதாக விளங்கும் இந்த எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.79 லட்சத்தில் இருந்து ரூ.15.09 லட்சம் வரையில் உள்ளன.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

உண்மையில் மஹிந்திரா & மஹிந்திராவின் சமீபத்திய வெற்றிக்கர மாடல்களுள் தாரும் ஒன்று என்பதை உறுதியாக கூறலாம். ஏனெனில் கடந்த ஒரு வருடத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மட்டுமின்றி, பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் புள்ளிகளின் வீட்டை இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் சென்றடைந்துள்ளது. பிரபலங்கள் மட்டுமில்லாமல், நடுத்தர வர்த்தகத்தினரும் பல நாள் கனவாக மஹிந்திரா தாரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களை 2020 தார் பெற்றுள்ளது. பயணிகள் பாதுகாப்பில் இந்த அதிகப்படியான மதிப்பெண்ணும் இந்த மஹிந்திரா தயாரிப்பிற்கு கிடைத்துவரும் வரவேற்பிற்கு முக்கிய காரணம் எனலாம். புதிய தலைமுறை தார் ஆனது ஹார்ட் டாப் (எளிதில் நீக்க முடியாது) மற்றும் சாஃப்ட் டாப் (மடித்து வைக்கக்கூடியது) என்ற இரு விதமான மேற்கூரை தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

இதில் ஹார்ட் டாப் வெர்சன் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியிருப்பதும் ஹார்ட் டாப் வெர்சன் போல் தான் படங்களில் தெரிகிறது (உறுதியாக தெரியவில்லை). தாரில் எல்இடி டிஆர்எல்கள், அலாய் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி உடன் எதிரெதிர் பார்க்கப்பட்ட பின் இருக்கைகள் உள்ளிட்டவற்றை சிறப்பம்சங்களாக மஹிந்திரா வழங்குகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

பழமையான ஜிப் வாகனங்களுக்கே உண்டான பெட்டக வடிவத்தை அப்படியே தொடர்ந்திருந்தாலும், மஹிந்திரா தாரில் தொழிற்நுட்ப அம்சங்கள் மாடர்ன் தரத்திலேயே வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம். தாரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் உதவி, ரோல் கேஜ், பேனிக் பிரேக்கிங் சிக்னல், திருடுப் போவதை தடுக்கும் அலாரம், பயணி காற்றுப்பையின் செயல்பாட்டை தவிர்க்கும் ஸ்விட்ச் மற்றும் இஎஸ்பி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றுடன் க்ரூஸ் கண்ட்ரோல், டயர்களின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு போன்றவையும் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் கொடுக்கப்படுகின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு தாரில் 2.0 லிட்டர் எம் ஸ்டாலியோன் 150 டிஜிடிஐ மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் 130 என்ற இரு என்ஜின் தேர்வுகளை மஹிந்திரா வழங்கி வருகிறது. இதில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும், எம்ஹாவ்க் டீசல் என்ஜின் 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் வேரியண்ட்கள் அனைத்திற்கும் 4x4 ட்ரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. நபோலி கருப்பு மட்டுமின்றி, சிவப்பு ரேஜ் நிறத்திலும் தார் வாகனத்தினை பெறலாம். இருப்பினும் முந்தைய தலைமுறையை காட்டிலும் தற்போது விற்பனையில் இருக்கும் தாரின் முரட்டுத்தனமான தோற்றம் சற்று குறைவு தான்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவிரி பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ்!! ஷோரூம் விலையே ரூ.15 லட்சத்தை தாண்டுது!

அதுமட்டுமின்றி விலையும் நம் இந்திய சந்தையை பொறுத்தவரையில் அதிகமே. விற்பனையில் மஹிந்திரா தாருக்கு நேரடி போட்டி மாடலாக ஃபோர்ஸ் குர்கா விளங்குகிறது. பிஎஸ்6-க்கு இணக்கமான புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அதேநேரம் விலை மற்றும் எஸ்யூவி உடலமைப்பினால் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்டவையும் போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Veteran actor prakash raj buys mahindra thar suv details
Story first published: Friday, November 19, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X