84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

மூத்த நடிகை ஒருவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

மூத்த நடிகைகளில் ஒருவரான வஹீதா ரஹ்மான் (Waheeda Rehman) தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (BMW 5 Series Facelift) மாடல் ஆகும். கூலி (Coolie), டெல்லி 6 (Delhi 6) போன்ற இந்தி திரைப்படங்களில் வஹிதா ரஹ்மான் நடித்துள்ளார்.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரானது, சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த 2021ம் ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வஹிதா ரஹ்மான் தற்போது வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார், ப்ளூஸ்டோன் மெட்டாலிக் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது மெட்டாலிக் க்ரே கலர் ஆகும்.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

வஹிதா ரஹ்மான் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின், 530ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட் (530i M Sport Variant) ஆகும். இதன் விலை தற்போதைய நிலையில் 64.50 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். 5 சீரிஸ் காரில், பிஎம்டபிள்யூ நிறுவனம் இன்னும் 2 வேரியண்ட்களையும் விற்பனை செய்து வருகிறது.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

இதில், 520டி லக்ஸரி லைன் (520d Luxury Line) ஒன்றாகும். இதன் விலை தற்போதைய நிலையில் 65.90 லட்ச ரூபாயாக உள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். மற்றொன்று 530டி எம் ஸ்போர்ட் (530d M Sport) வேரியண்ட் ஆகும். இதன் விலை தற்போதைய நிலையில் 74.50 லட்ச ரூபாயாக உள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் மற்ற மிட்-சைஸ் சொகுசு செடான் கார்களான ஆடி ஏ6 (Audi A6), ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF), வால்வோ எஸ்90 (Volvo S90) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) போன்ற கார்களுக்கு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் விற்பனையில் கடுமையான சவாலை வழங்கி வருகிறது.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

ப்ளூஸ்டோன் மெட்டாலிக் தவிர, கார்பன் ப்ளாக் (Carbon Black), ஆல்பைன் ஒயிட் (Alpine White) மற்றும் பைட்டோனிக் ப்ளூ (Phytonic Blue) போன்ற வண்ணங்களிலும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை நீங்கள் தேர்வு செய்யலாம். பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் ஒவ்வொரு வேரியண்ட்டும் வெவ்வேறு வகையான இன்ஜினை பெற்றுள்ளது.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

இதன்படி இந்த காரின் 530ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில், 2.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு, நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 252 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த வேரியண்ட் வெறும் 6.1 வினாடிகளில் எட்டி விடும்.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள். அதே நேரத்தில் 520டி லக்ஸரி லைன் வேரியண்ட்டில், 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட இந்த வேரியண்ட், 7.5 வினாடிகளை எடுத்து கொள்ளும்.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

இந்த வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 235 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் 530டி எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில், 3.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, ஆறு-சிலிண்டர், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 265 பிஎஸ் பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் இந்த வேரியண்ட் எட்டி விடும்.

84 வயசாச்சு... இளசுகளுக்கு போட்டியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய மூத்த நடிகை... எவ்ளோனு தெரியுமா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த அனைத்து இன்ஜின்களுடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. இளம் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்கி வரும் நிலையில், மூத்த நடிகையான வஹீதா ரஹ்மானும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவருக்கு தற்போது 84 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Monday, June 13, 2022, 20:08 [IST]
English summary
Veteran indian actress waheeda rehman buys bmw 5 series facelift check details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+