விபத்தில் சின்னாபின்னமான புகாட்டி கார் ரூ.1.67 கோடிக்கு ஏலம் போனது!

By Saravana

விபத்தில் சிக்கி சின்னாபின்னமான புகாட்டி வேரான் கார் ஒன்று ரூ.1.67 கோடிக்கு ஏலம் போய் வியக்க வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரியாவில் நடந்த விபத்தில் இந்த புகாட்டி கார் விபத்தில் சிக்கியது.

மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு விபத்தில் அந்த கார் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, அந்த காருக்கு இன்ஸ்யூரன்ஸ் வழங்கியிருந்த AXA இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ஏலம் விட முடிவு செய்தது.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் விபரங்களை காணலாம்.

கார் மாடல்

கார் மாடல்

விபத்தில் சிக்கி ஏலத்திற்கு வந்த அந்த கார் 2008ம் ஆண்டு மாடல் புகாட்டி வேரான் கார். வெளிப்புறத்தில் இரட்டை வண்ண பெயின்டிங் செய்யப்பட்ட மாடல்.

 பாதிப்பு

பாதிப்பு

முன்புறம், பின்புறம், கதவுகள், காரின் அடிப்பாகம், சஸ்பென்ஷன் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளதாக காரை பற்றிய ஏல விபரத்தில் AXA இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. டயர் ஒன்றும் இல்லை.

ஓடிய தூரம்

ஓடிய தூரம்

இந்த கார் 31,924 கிமீ தூரம் ஓடியதாக ஓடோமீட்டரில் காண்பிக்கிறது. இது மிக அதிக தூரம் ஓடியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

 ஏலம்

ஏலம்

விபத்தில் சிக்கி சின்னாபின்னாமான இந்த கார் தற்போது சுவிட்சர்லாந்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ.1.67 கோடிக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரை மறுசீரமைபப்பு செய்ய இதைவிட அதிக தொகையை செலவிட வேண்டி வரும் என தெரிவிக்கப்படுகிறது.

 பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

இந்த காரில் 987 எச்பி பவரை வழங்கும் டபிள்யூ16 8.0 லிட்டர் க்வாட் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் சராசரி டாப்ஸ்பீடு மணிக்கு 408.84 கிமீ வேகம் என புகாட்டி தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 1, 2014, 10:52 [IST]
English summary

 In recent days, there have been a lot of accidents involving supercars. Many were damaged and some beyond repairs. Along this list is a Bugatti Veyron, which was wrecked after a crash and was sold recently for £167,243 in spite of having major damage, like a missing tyre, scraped bodywork and even peeled off panels.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+