கார் விபத்தில் சிக்கினால் தற்காத்துக் கொள்வதற்கான உயிர் காக்கும் கருவி!

By Gopi

மனம் முழுத்த சந்தோஷத்துடனும், உத்வேகத்துடனும் ஆள் அரவம் இல்லாத அமைதியான இடத்தில் நீங்கள் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத விதமாக ஏதேனும் விபத்துகள் நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு ஆள்கள் இல்லை. காருக்குள் சிக்கியிருக்கும் உங்களைக் காப்பாற்ற பக்கத்தில் எவரும் இல்லை. அதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் நாம் என்ன செய்வது?

உயிர் காக்கும் கருவி

பதற வேண்டிய அவசியமில்லை. தன்கையே தனக்கு உதவி எனப் படித்திருப்பீர்களே அந்த முறையில் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும். உடைந்தோ, நசுங்கியோ சேதமடைந்திருக்கும் காருக்குள் இருந்து முதலில் நாம் வெளியேறுவது அவசியம்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்காக விக்டரினாக்ஸ் (Victorinox) என்ற சுவிட்சர்லாந்து நிறுவனம், விபத்து கால மீட்புக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கமாக உள்ள இந்த சாதனத்தில் 12 வகையான பிளேடுகள், கத்திகள், டிரைவர்கள் உள்ளிட்ட கருவிகள் உள்ளன.

அவை அனைத்தும் துரு பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் உருவாக்கப்பட்டவை.

லாக்கபிள் பிளேடு எனப்படும் கருவி, பக்கவாட்டுகளிலும், முகப்பிலும் உள்ள பீடிங்கை அறுத்து கண்ணாடியை அகற்ற உதவும்.

கண்ணாடியை எளிதில் அகற்ற முடியாத பட்சத்தில் அதை உடைத்து எடுக்க உதவும் கருவியும் அதில் உள்ளது. இல்லாவிடில் கண்ணாடியை அறுத்து எடுக்கவல்ல ரம்பம் போன்ற வடிவமைப்பு கொண்ட கருவியும் விக்டரினாக்ஸ் மீட்பு சாதனத்தில் உள்ளது.

அதைப் பயன்படுத்தியும் கண்ணாடியை அகற்றி வெளியேறலாம்.


சீட் பெல்ட் அணிந்திருப்பீர்களேயானால், அதை அறுத்தெடுக்க கான்கேவ் செட்டர் கத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்கூருக்களை கழற்றவும், அகற்றவும் உதவும் ஸ்கூரு டிரைவர் வடிவிலான கருவியும் அதில் உள்ளது.

இதைத் தவிர பல வகையிலும் விக்டரினாக்ஸ் மீட்பு சாதனைப் பயன்படுத்தி விபத்துக் காலத்தில் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

இதன் விலை ரூ.5,310 ஆகும். கார்களில் உள்ள ஏர்பேக் வசதிகளால் விபத்தின்போது நாம் காப்பாற்றப்பட்டாலும், காருக்குள் சிக்கியிருக்காமல் உடனடியாக வெளியேறினால்தான் பூரணமாக சுவாசிக்க முடியும்.

எனவே நம்மையும், நாம் நேசிக்கும் குடும்பத்தினரையும் பாதுகாக்க இதுபோன்ற கருவிகளைக் கையுடன் எடுத்துச் செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 23, 2016, 16:34 [IST]
English summary
Victorinox Rescue Tool - Single Handed Swiss Salvation
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X