விடாமுயற்சி போஸ்டரில் உள்ள இந்த காரை பாத்தீங்களா? இந்த கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?
நடிகர் அஜித்குமார் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.40க்கு வெளியாகிறது. இதற்கான போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இதில் லெக்ஸஸ் நிறுவனத்தின் கார் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்த காரை பயன்படுத்த என்ன காரணம்? அப்படி இந்த திரைப்படத்தில் என்ன இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் அஜித்குமார் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் விடாமுயற்சி, இந்த படம் குறித்து மக்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஒரு படம் திரைக்கு வரவுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் இருக்கிறனர். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது.

இந்த அறிவிப்புக்காக பட தயாரிப்பு நிறுவனம் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டத்தில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கும் நிலையில் முக்கியமாக ஒரு காரின் புகைப்படமும் இந்த டிசைனில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. லெக்ஸஸ் நிறுவனத்தின் எல்எக்ஸ் 570 ரக கார் தான் இது. இந்த கார் இந்த மாடலின் 3வது தலைமுறை காராகும்.
விடாமுயற்சி திரைப்படத்தில் கார் மிக முக்கிய பங்கு வகிக்கும் என இதற்கு முன்னர் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமும் இந்த திரைப்படம் குறித்து வெளியான தகவல்கள் மூலமும் தெரிய வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஏற்கனவே ஹம்மர் கார் ஒன்றை ஓட்டி விபத்தில் சிக்கிய வீடியோவும் சமீபத்தில் வெளியானது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலர் அந்த வீடியோ வெளியான போது ஹம்மர் கார் குறித்து அதிகம் தேடினார்கள். இந்நிலையில் இந்த படக்குழு தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் லெக்ஸஸ் நிறுவனத்தின் எல்எக்ஸ் 570 ரக கார் வெளியாகியுள்ளது. இந்த காரும் திரைப்படத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.
இது மட்டுமல்ல இந்த திரைப்படத்தின் டிரைலரில் கூட இந்த கார் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கார் தனித்துவமான அம்சங்கள் கொண்ட காராக இருக்கிறது. இது உலகின் காஸ்ட்லியான கார் பிராண்டான லக்ஸெஸ் நிறுவனத்தின் 570 சிரீஸின் கார் ஆகும். இது அந்த மாடலின் 3வது தலைமுறை கார்.
இந்த தலைமுறை கார் தற்போது விற்பனையில் இல்லை. தற்போது 4வது தலைமுறை கார் தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் கார் ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்களுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த காரில் 270 கிலோ வாட் பவர் தரும் வி8 5.7 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் மொத்தம் 7 பேர் வரை பயணம் செய்ய முடியம். இந்த காரின் ஃபெர்பார்மென்ஸை பொருத்தவரை 0-100 கிமீ வேக்த்தை வெறும் 7.7 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜை பொருத்தவரை ஒரு லிட்டருக்கு 7.1 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.
இந்தியாவில் உள்ளவர்கள் கூட இந்த காரை வாங்க முடியும். இந்த காரின் விலை தான் ஹைலைட்.இந்த கார் இந்தியாவில் ரூ2.32 கோடி என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு காஸ்ட்லியான காரை திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்கள். இதனால் இந்த காருக்கு இந்த திரைப்படத்தில் முக்கிய இடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய இடம் பிடிக்கும் ஹம்மர் மற்றும் லெக்ஸெஸ் 570 ரக கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








