ஓட்ட தெரியாமல் கார் ஓட்டி விபத்தில் சிக்கினாரா நடிகர் அஜித்? இவர் என்ன காரை ஓட்டினார் தெரியுமா?
நடிகர் அஜித் குமார் நடித்துவரும் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அவர் கார் ஓட்டி விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அவர் என்ன வகையான காரை ஓட்டினார்? இவர் பயணித்த கார் எதனால் விபத்தில் சிக்கியது? என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். அவர் தற்போது மகிழ்ந்திரு மேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். அந்த திரைப்படத்தின் காட்சிகள் எல்லாம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இவர் படபிடிப்பில் கலந்து கொண்ட போது கார் சேஸிங் காட்சிகள் ஒன்று படமாகப்பட்டு கொண்டு இருந்தது.

இந்த காட்சியின் போது நடிகர் அஜித்குமார் ஹம்மர் எச்2 என்ற காரை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது திரைப்படத்தின் காட்சிக்காக கார் விபத்தில் சிக்குவது போன்ற காட்சிகளை படமாக்க வேண்டியது இருந்தது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் ட்ரோன் டேஷ்போர்டு கேமரா உள்ளிட்ட பல்வேறு செட்டப்களுடன் இந்த காட்சியை படமாக்கினார்கள்.
பொதுவாக ஹீரோக்கள் இப்படியான விபத்து காட்சிகளை படமாக்கும் போது அவருக்கு பதிலாக டூப் ஒருவரை வைத்து தான் படமாக்குவார்கள். ஆனால் நடிகர் அஜித் இந்த காட்சியில் தானே நடித்து இந்த காட்சியை படமாக்கி உள்ளார். இந்த காட்சிகளை தற்போது நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ என பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக வலைதளங்களில் ஹம்மர் எச்2 காருடன் பாலைவனங்களில் சூட்டிங் எடுப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அப்பொழுது இந்த வீடியோ விடாமுயற்சி படப்பிடிப்பு தளம் என வைரலாக பரவியது. அந்த வீடியோவிலும் ஹம்மர் எச்2 கார் இடம் பெற்றிருந்தது. தற்போது அதை நடிகர் அஜித்தை ஓட்டி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள காட்சிகளில் நடிகர் அஜித் வேகமாக ஹம்மர் எச் 2 காரை ஓட்டி வருகிறார். ஒரு பாலைவனத்திற்கு நடுவே இருக்கும் ரோட்டில் இந்த கார் தாறுமாறாக ஓடுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் நடிகர் அஜித்தின் கட்டுப்பாட்டை இழந்து இந்த கார் சாலையில் இருந்து கீழே பாலைவனத்தில் கவிழ்ந்து விடுகிறது. இப்படியான விபத்து வேண்டும் என்றே எடுக்கப்பட்டது போல இருக்கிறது.

தற்போது பரவி வரும் வீடியோவில் இந்த காட்சிகள் டிரோன் கேமரா மூலம், ஸ்டெடி கேமரா மூலம், அதே நேரம் காரின் முன் பக்கம் டேஷ்போர்டில் பொருத்தப்பட்ட கேமரா மூலமும் ரெக்கார்டு செய்யப்பட்ட வீடியோவாக இருக்கிறது. இந்த மூன்று காட்சிகளும் தனித்தனியாக வெளியாகி உள்ளன. வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முதலில் இந்த வீடியோவில் உள்ள காரை பற்றி பார்த்து விடுவோம். இந்த வீடியோவில் உள்ள கார் ஹம்மர் எச்2 கார் ஆகும். இந்த கார் தற்போது விற்பனையில் இல்லை பழைய காரை தான் தற்போது இந்த படப்பிடிப்பிற்காக பயன்படுத்தி உள்ளார்கள். இந்த கார் அறிமுகமானது முதல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காராக இருக்கிறது. 2009-ம் ஆண்டு இந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டது.
இருந்தாலும் இந்த காரின் வடிவமைப்பு மற்றும் காரின் லுக்கிற்காக பலர் இந்த காரை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே விற்பனையான காருக்கு செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கார் ஒரு அரிய வகை கார் என்றே சொல்ல வேண்டும். மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தற்போது பயன்பாட்டில் உள்ள காராக இருக்கிறது.
இந்த கார் கடைசியாக விற்பனையில் இருந்த போது இந்திய மதிப்பில் ரூபாய் 75 லட்சம் என்ற விலையில் விற்பனையில் இருந்தது. இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் சொந்தமாக வைத்திருந்தார்கள். இப்படியாக வேகமாக பயணித்து விபத்தில் சிக்க முடியுமா என்றால் அதற்கு பல்வேறு விதமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது.
நடிகர் அஜித்குமார் கார் ஓட்டி சாலையில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்குவது போன்ற உள்ள காட்சிகளை பார்க்கும்போது சாதாரணமாக நாம் இவ்வாறு கார் ஓட்டினால் அந்த கார் கவிழ்வதற்கான வாய்ப்புகள் என்பது குறைவு தான். ஆனால் குறிப்பிட்ட இந்த காட்சியில் கார் கவிழ வேண்டும் என்பதற்காகவே சில விஷயங்களை தனித்துவமாக செய்துள்ளார்கள் என்பது நமக்கு புரிகிறது.
முக்கியமாக கார் டயர் கிரிப் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக டயரில் உள்ள திரட்டுகளை எல்லாம் நீக்கி வழுவழுப்பான டயர் கொண்டு இந்த காரை இயக்கினால் இப்படியான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வேகமாக வந்து லேசாக திரும்பினால் கார் கவர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் மாடிஃபிகேஷன் செய்து கார் கவிழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருந்தால் மட்டுமே இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் கார் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அதிக பெயரை பெற்றவராக இருக்கிறார். இவர் உண்மையிலேயே கார் பைக் ரேஸ் களில் அதிகம் ஈடுபடுபவர் என்பதால் இந்த காட்சிகளில் அவரே நேரடியாக காரை ஓட்டி விபத்தில் சிக்கி ரிஸ்க் எடுத்து உள்ளார். இவரின் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியது தான்.


Click it and Unblock the Notifications









