இம்மி பிசகினாலும்... அல் தி ஜம்ப்பரின் மயிர்கூச்செரிய செய்யும் புதிய சாதனை!!

Written By:

சுவீடனை சேர்ந்த விளையாட்டு வீரரும், சாகச கலைஞருமான அல் ஏற்கனவே அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து வந்த லம்போர்கினி காரை தாண்டி புதிய சாதனை படைத்திருந்தார்.

இந்த நிலையில், அதற்கு ஒருபடி மேலான புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மணிக்கு 110 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்து வரும் இரண்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அனாயசமாக தாண்டி குதித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.

சீறிப்பாய்ந்து வந்த கவாஸாகி மற்றும் டுகாட்டி ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அவர் வெகு லாவகமாக கண் மூடி திறக்கும் நேரத்தில் தாண்டி குதிக்கும் அரிய வீடியோவை கீழே வீடியோவில் காணலாம்.

இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து முதலில் சர்ச்சைகள் எழுந்தாலும், இன்ஸ்டாகிராமில் அல் வெளியிட்டிருக்கும் வீடியோ, இந்த சாதனையை உண்மையானதாக்கியுள்ளது. மயிர்கூச்செரிய செய்யும் அந்த வீடியோவை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம்.

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/R_L00EB7BaI" frameborder="0" allowfullscreen></iframe></center> 

English summary
Swedish daredevil Al the Jumper, is literally attempting to leap into the record books. He has been in videos before for what he does best- Jump.&#13;
Story first published: Wednesday, January 28, 2015, 11:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark