ஏர்பஸ் ஏ380 விமானத்துடன் போட்டி போட்ட ஜெட்மேன் ஈவ்ஸ் ராஸ்ஸி!!

By Ravichandran

ஜெட்மேன் ஈவ்ஸ் ராஸ்ஸி மற்றும் அவரது நண்பரும் ஏர்பஸ் ஏ380 விமானத்துடன் போட்டி போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஈவ்ஸ் ராஸ்ஸி கின்னஸ் உலக சாதனைகளுக்கு புகழ்பெற்றவர். இவருக்கு ஜெட்மேன் என்ற பெயரும் உள்ளது. ஈவ்ஸ் ராஸ்ஸி, தனது பிரத்யேக ஜெட் பேக் மூலம் அடிக்கடி வானில் பறந்து சாதனைகள் நிக்ழத்துவார்.

ஈவ்ஸ் ராஸ்ஸி தான், தனி நபர் ஜெட் பேக்கை கண்டுபிடித்தவர். இந்த ஜெட்பேக்குகள் கார்பன் ஃபைபர்களால் ஆன இறக்கைகளை கொண்டுள்ளது.

சில தினங்களுக்கும் முன்பு, ஈவ்ஸ் ராஸ்ஸி தனது நன்பரான விண்டெண்ட் ரெஃப்ஃபட்-டுடன் இணைந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏ380 விமானத்துடன் போட்டி போட்டு பறந்து வானில் சாகசங்களை நிகழ்த்தினர். இந்த ஏ380 விமானம், உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக உள்ளது.

இவர்கள் துபாயின் வான்வெளி தெளிவாக தெரியும் வகையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்தில் பறந்தனர். ஈவ்ஸ் ராஸ்ஸி, விண்டெண்ட் ரெஃப்ஃபட், ராட்சத அளவிலான விமானத்துடன் பறந்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு அதிசயதக்க சாகசங்களை செய்தனர்.

ஈவ்ஸ் ராஸ்ஸி தொடர்பான செய்திகளையும், வீடியோக்களையும், #HelloJetman என்ற ஹாஷ்டாக்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

மனதை கொள்ளை கொள்ளும் வீடியோவை அனைவரும் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 7, 2015, 9:52 [IST]
English summary
Video of Jetman Yves Rossi and Vincent Reffet Flying Alongside A380 released. Swiss Guinness record holder 'Jetman' Yves Rossi took to the skies of Dubai, once again with his protege Vincent Reffet.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+