உண்மையான பாகுபலி ஜான் ஆப்பிரஹாம் தான்: இவர் செய்த காரியத்தை பாருங்க!

Written By:

கார் மோகம் கொண்டவர்களுக்கு 'ஃபாஸ்ட் அண்ட் ஃயூரியஸ்' படம் போல பைக் மீது காதல் வரவழைத்த படம் 'தூம்'. இந்தியர்களை சூப்பர் பைக்குகள் மீது மோகம் கொள்ளச்செய்த இப்படத்தில் நடித்த பாலிவுட் நட்சத்திரம் ஜான் ஆப்பிரஹாம் நிஜத்திலும் ஒரு பைக் காதலரே. இவரின் கேரஜில் பல சூப்பர் பைக்குகள் அலங்கரிக்கின்றன.

நிஜத்தில் பாகுபலி ஆன ஜான் ஆப்பிரஹாம்!

ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஜான் ஆப்பிரஹாம் பாகுபலி பட நாயகன் பிரபாஸ் போல அதிக எடை கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தை நிஜத்தில் தன் தோளில் சுமந்து வந்து அதை தூக்கி எரிந்தார் அதுவும் பல நட்சித்திரங்கள் முன்னிலையில். தான் நடித்த புதிய படத்தின் ப்ரோமோஷனுக்காக இதனை செய்துள்ளார் அவர்.

நிஜத்தில் பாகுபலி ஆன ஜான் ஆப்பிரஹாம்!

முன்னதாகவே தான் நடித்திருந்த ‘ஃபோர்ஸ்' என்ற படத்தில் இதே போன்று ஒரு பைக்கை தோளில் தூக்கி அதனை வில்லன் மீது எரியும் காட்சியில் நடித்திருக்கும் ஜான் ஆப்பிரஹாம் நிஜத்தில், பல பாலிவுட் நட்சத்திரங்கள் முன்னிலையில், பலரும் சூழ்ந்திருந்த மேடையில் இருசக்கரவாகனத்தை தூக்கி வந்து அதனை தூக்கி எரிந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

நிஜத்தில் பாகுபலி ஆன ஜான் ஆப்பிரஹாம்!

திரை மறைவில் இதைப்போன்ற காட்சியை படமாக்க பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகப்படுத்தப்படும் நிலையில், வெறும் கைகளால் இதை செய்திருப்பது அவரை நிஜ பாகுபலி ஆக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

இவர் தூக்கி எரிந்த பைக் 1990களில் பயன்படுத்தப்பட்டதாகும், பிளாஸ்டிக் கலக்காத இது நிச்சயம் எடை கூடுதலாக இருந்திருக்கும். விழா மேடையில் சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன், சச்சின் போன்ற படங்களில் நடித்த நடிகை ஜெனிலியாவும் இருந்தார்.

மேலே உள்ள வீடீயோவில் ஜான் ஆப்பிரஹாம் பைக்கை தோளில் சுமந்து வந்து தூக்கி எரிந்த காட்சியைக் காணலாம்.

English summary
john abraham carried motorcycle in shoulders for real
Story first published: Friday, March 31, 2017, 8:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark