யாரு சாமி இவரு! ரோட்டுல ஸ்கூட்டர தலைகீழா ஓட்டிட்டு போறாரு? - வைரலாகும் வீடியோ

ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்கிறேன் என்ற பெயரில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டரையே தலைகீழாக செட்டப் செய்து சாலைகளில் ஒட்டி வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை இவர் எப்படி செட்டப் செய்தார் என்பது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக ஒருவர் தனது வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர் தனக்கு தேவையான வசதி, வாகனத்திற்கு அழகு ஊட்டும் விஷயம், ஏற்கனவே ஸ்கூட்டரின் இல்லாத ஒரு அம்சம் ஆகியவற்றை கூட்டில் சேர்ப்பது உள்ளிட்ட மாடிஃபிகேஷன் எல்லாம் செய்வார்கள் இது எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

scooter modification

சிலர் வித்தியாசமாக ரோட்டில் செல்லும்போது மற்றவர்கள் நம் வாகனத்தை பார்க்க வேண்டும் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் சற்று வித்தியாசமாக மாடிஃபிகேஷன் செய்வார்கள். ஆனால் இப்படி மாடிஃபிகேஷன் செய்தாலும் வாகனத்திற்கான அடிப்படை லட்சணம் மாறாமல் மாடிஃபிகேஷன் செய்வார்கள். அது தான் அனுமதிக்கப்பட்ட விஷயமும் கூட.

ஆனால் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒருவர் வேண்டுமென்றே தனது வாகனத்தை வசதி இல்லாத மிக மோசமான வகையில் மாடிஃபிகேஷன் செய்து ஓட்டி வருகிறார். தனது ஸ்கூட்டரை அப்படியே உல்டாவாக போடும்படி மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இந்த யோசனைஅவருக்கு எப்படி வந்தது என தெரியவில்லை.

scooter modification

அதாவது இந்த ஸ்கூட்டரை சாலையில் ஒட்டி செல்லும்போது இந்த ஸ்கூட்டர் ரிவர்சில் செல்வது போல தோற்றமளிக்கும். அந்த வகையில் தனது ஸ்கூட்டரை அப்படியே மாடிஃபிகேஷன் செய்து சாலையில் ஓட்டி வருகிறார். இதற்காக அவர் வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டரை பயன்படுத்தியுள்ளார். இதை பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது.

இந்த வீடியோவின் படி இவர் வாகனத்தின் பின் வீலை திருப்பும் படியாக ஹேண்டில் பார்களை அமைத்து முன்பக்கம் உள்ள ஹேண்டில் பார்களை அசையாதவாறு செட் செய்துள்ளார். வாகனத்தின் சைலன்சர் முன்பக்கம் இருக்கும்படி வடிவமைத்துள்ளார். வாகனம் அப்படியே தலை கீழாக இருக்கும்படி இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் இவர் சீட்டிற்கும் ஹேண்டில் பார்க்கும் இடையே உள்ள இடத்தில் அமர்ந்தபடி காலை அதற்கென பிரத்தியேகமாக இவர் செட் செய்த ஃபூட் டிரஸ்டில் வைத்து வாகனத்தை ஓட்டி வருகிறார். சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் இதை பார்க்கும் போது இவர் ஏதோ வாகனத்தை ரிவர்சில் ஓட்டுகிறார் என நினைக்கத் தோன்றும்.

ஆனால் இவர் வாகனத்தை நேராக தான் அமர்ந்து ஓட்டுகிறார். இவர் சாலையில் செல்லும் போது மற்ற வாகன ஓட்டிகள் இவரை சற்று வித்தியாசமாக பார்த்து செல்கின்றனர். இவர் இப்படியாக சாலையில் ஓட்டி செல்வதை சக வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது ஆனால் இப்படியாக வாகனம் ஓட்டுவது சட்ட விதிமுறைப்படி தவறான செயலாகும். வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்யும்போது அதன் அடிப்படை அம்சம் மாறாமல் மாடிஃபிகேஷன் செய்யலாம் சின்ன சின்ன மாடிஃபிகேஷனை செய்ய மட்டுமே அனுமதி உண்டு. மற்றது எல்லாம் சட்டவிரோதமான விஷயம்.

ஆனால் இவர் வாகனத்தின் ஒட்டுமொத்த டிசைனையுமே மாற்றி இப்படியாக மாடர்ன் செய்யப்பட்ட வாகனங்களை சாலையில் ஓட்டுவது மோட்டார் வாகன சட்டப்படி விதிமுறை மீறலாகும் இது தண்டனைக்குரிய குற்றமாகும். இப்படியாக வாகனம் ஓட்டினால் சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கு அது தொந்தரவாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையை செல்லும் சக வாகன ஓட்டிகள் இவரது வாகனத்தை அதிசயமாக பார்த்துக் கொண்டே சென்று விபத்தில் சிக்க கூட நேரிடும். இதனால் இப்படியாக வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்ய நினைத்தால் இப்படியான மாடிஃபிகேஷனை செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 4, 2023, 23:16 [IST]
English summary
Video of an unconventional ulta scooter created through ingenious improvisation that has puzzled t
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+