அம்பானி வீட்டுல நடக்கும் விசேஷத்துக்கே டஃப் கொடுத்திட்டாங்க! பிரமாண்டமா நயனுக்கு கார கிஃப்ட் கொடுத்திருக்காங்க

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அவருடைய ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் சமீபத்தில் அவருடைய 39 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஆச்சரிய பரிசாக விலை உயர்ந்த காரை கணவர் விக்னேஷ் சிவன் வழங்கினார்.

இதுதான் பரிசு என்று குறிப்பிடாமல், காரின் முன் பக்கத்தில் இருக்கும் எம்பளத்தை மட்டும் வெளியிட்டு அவருடைய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற விட்டார் நடிகை நயன்தாரா. இந்த நிலையிலேயே, தற்போது நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் காரை பரிசளிக்கும் வீடியோ வெளியாகி இருக்கின்றது.

Nayanthara maybach

இந்த சம்பவத்தை விக்னேஷ் சிவன் மிகப் பெரிய கொண்டாட்டமாகவே கொண்டாடி விட்டார். இதையே வெளியாகி இருக்கும் அந்த வீடியோவும் காட்டுகின்றது. வீடியோவில், இந்த நிகழ்ச்சியின்போது சில முக்கிய திரை பிரபலங்களும் கலந்துக் கொண்டதை நம்மால் காண முடிகின்றது. முக்கியமாக லவ் டுடே இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கலந்துக் கொண்டதை நம்மால் காண முடிகின்றது.

இந்த நிலையிலேயே காரை ஒரு மிகப் பெரிய பெட்டகத்திற்குள் வைத்து பரிசாக வழங்கினார் விக்னேஷ் சிவன். நயன்தாராவிற்கு பரிசாக வழங்கப்பட்டு இருப்பது மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS600) சொகுசு எஸ்யூவி ரக காராகும். இந்த காரின் ஆரம்ப விலையே 2 கோடியே 96 லட்சம் ரூபாய் ஆகும்.

Nayanthara got maybach

இது வெறும் அந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர காரையே நயன்தாராவிற்கு விக்னேஷ் பரிசாக வழங்கினார். இந்த காரில் நயன்தாரா ஏற்கனவே தன்னுடைய பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியாகிய அன்னபூரணி திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க அவர் இந்த சொகுசு காரிலேயே தியேட்டருக்கு வந்திருந்தார். இந்த காரை நடமாடும் சொகுசு மாளிகை என்று கூறலாம். கார் ஆர்வலர்களும் இவ்வாறே கூறுகின்றனர். அந்த அளவிற்கு லக்சூரி அம்சங்களை மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்றது.

Nayanthara rs 3 crore maybach car

மசாஜ் செய்தல், எலெக்ட்ரிக்கலாக அட்ஜெஸ்ட்மென்ட் செய்தல், கூலிங் மற்றும் ஹீட்டிங் ஆகிய வசதிகள் கொண்ட இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், அமர்ந்து பயணிக்கும்போது கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவம் கிடைக்கும். இதனால்தான் தொழிலதிபர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக ஜிஎல்எஸ் 600 இருக்கின்றது. இத்துடன், பொழுதுபோக்கு திரைகள், பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மேபேக் எம்பளம் பொருந்திய ஃபூட் பெடல்கள், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் மற்றும் 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான், சாவியில்லாமல் நுழைவது போன்ற ஆச்சரியமளிக்கும் தொழில்நுட்ப அம்சங்களும் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 557 பிஎஸ் பவரையும், 730 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், அனைத்து வீல் இயக்கம் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு உள்ளன.

இவற்றுடன், 48 வோல்ட் மைல்டு-ஹைபிரிட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சிஸ்டம் கூடுதலாக 22 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க்கையும் வழங்கும். இது மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். மிக முக்கியமாக தேவையில்லாமல் எரிபொருள் வீணாவதை இது தவிர்க்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற விலை உயர்ந்த கார் பரிசளிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், முகேஷ் அம்பானி அவருடைய மனைவி நீதா அம்பானிக்கு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பரிசாக வழங்கி அசத்தினார். ஆனால், இந்த சம்பவத்தை தூக்கி சாப்பிடும் வகையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு இந்த காரை பரிசளித்து அசத்தி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 10, 2023, 5:00 [IST]
English summary
Video of vignesh shivan gifting nayanthara a luxury car worth rs 3 crores
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X