ஆட்டோபைலட் சிஸ்டத்தால் உயிர்பிழைத்த வீடியோ வெளியீடு
டெஸ்லாவின் ஆட்டோபைலட் சிஸ்டம் மூலம் உபேர் டிரைவர் உயிர்பிழைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, ஆட்டோபைல்ட் சிஸ்டத்துடன் இயங்கும் கார்களை வெளியிட்டது. இதன் அம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் நல்ல விதமாக பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
டெஸ்லா கார்களில் ஆட்டோ பைலட் சிஸ்டத்தில் செமி-ஆட்டோனமஸ் மோட் எனப்படும் ஒரு வசதி உள்ளது. தனது காரில் இந்த வசதி இருந்ததால், தனது உயிர் பாதுகாக்கப்பட்டதாக டெஸ்லா காரின் சொந்தகாரரும், டிரைவரும் ஆன ஜான் ஹால் கூறினார்.
இந்த செமி-ஆட்டோனமஸ் மோட் அமைப்பு, மரணம் நிகழக்கூடிய வகையில் ஏற்பட இருந்த விபத்தில் இருந்து ஜான் ஹாலை காப்பாற்றியுள்ளது.
தனக்கு நடந்த விபத்தை பற்றி ஜான் ஹால் விவரமாக விவரிக்கிறார். ஜான் தனது டெஸ்லா மாடல் எஸ் பி85டி காரை, அமெரிக்காவின் ஸ்டேட் ரூட் 99-ல் இயக்கி சென்று கொண்டிருந்தார்.
ஹால் சென்ற காருக்கு முன்பாக, திடீரென்று ஒரு கார் இடது பக்கம் திரும்புகிறது. ஹால் தனது காரை மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சென்று கொண்டிருந்தார். டெஸ்லாவின் ஆட்டோபைலட் சிஸ்டம் தானாக பிரேக்கை அழுத்தாமல் இருந்திருந்தால், ஹால் நிலைமை மிகவும் அபாயகரமாக இருந்திருக்கலாம்.
டெஸ்லாவின் கார்கள் அருகில் இருக்கும் பொருட்கள, வாகனங்களை ஆராய, கேமரா மற்றும் ரேடார் சிஸ்டம்களை பயன்படுத்துகிறது. ஆட்டோபைலட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஸ்டிய்ரிங், ஆட்டோமேட்டிக் லேன் சேஞ்ஜ், சைட் கொள்ளிஷன் வார்னிங் மற்றும் ஆட்டோமேட்டிக் பேரளல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
தான் எப்படி ஆபத்தில் இருந்து நிகழவிருந்த ஆபத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பதை காட்டவும், துள்ளியமாக வேலைசெய்யும் டெஸ்லாவின் ஆட்டோபைலட் சிஸ்டம் உதவியால் ஹால் உயிர் பிழைத்ததனை விளக்கும் இந்த யூட்யூப் வீடியோவை ஏராளமானோர் கண்டு வியந்து கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








