டிரிஃப்டிங்கில் கலக்கிய இன்னோவா கார் - வைரலான வீடியோ!
இன்னோவா காரில் டிரிஃப்டிங் மற்றும் பர்ன் அவுட் செய்துள்ள வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
கார் ட்ரிஃப்டிங் என்பது காரை, சுழலச் செய்து சறுக்கிச் செல்லும் சாகச விளையாட்டாகும். பொதுவாக எல்லா கார்களிலும் இதனை சுலபமாக செய்துவிட முடியாது. கார் டிரிஃப்டிங் மீது ஆர்வம் கொண்டவர்கள் இதற்காக தங்கள் கார்களில் விஷேச மாற்றங்கள் செய்திருப்பர்.

ஸ்போர்ட்ஸ் கார்கள் அல்லது சில குறிப்பிட்ட மாடல்களில் மட்டுமே டிரிஃப்டிங் செய்வது சாத்தியம். ஆனால் டொயோட்டா இன்னோவா போன்ற எஸ்யூவி கார்களை டிரிஃப்டிங் செய்ய யாரும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள்.
சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள வீடியோ ஒன்றில் மாடிஃபை செய்யப்பட்ட இன்னோவா காரில் இளைஞர் ஒருவர் வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் டிரிஃப்டிங் செய்வதுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. எனினும் சரியாக ட்யூன் செய்யப்படாத இன்னோவா காரில் பர்ன் அவுட் செய்ததால் அது நெருப்புக்கு பதிலாக கரும்புகையையே வெளியிட்டது.

சொகுசான பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட இன்னோவா எஸ்யூவி கார்களை இது போல மோட்டார் ஸ்போர்ட்ஸ்-க்கு யாரும் பயன்படுத்துவதில்லை. தற்போது அரிதான ஒரு நிகழ்வாக எஸ்யூவி காரான இன்னோவாவை டிரிஃப்டிங்கிற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னோவா காரில் பர்ன் அவுட் மற்றும் டிரிஃப்டிங் செய்த சாகச வீடியோவை நீங்களும் பாருங்கள்...
புதிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணுங்கள்:


Click it and Unblock the Notifications








