லம்போகினி ஹுராகேன் காரை ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதிய எம்எல்ஏ மனைவி...

Written By: Krishna

பரபரப்பாக இயங்கும் பகல் பொழுது... அவரவர் வேகமாக தங்களது வேலைகளைப் பார்க்க அடித்து பிடித்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது வேகமாக வந்த அல்ட்ரா மாடல் லம்போகினி ஹியூராகேன் கார், டமால் என்று மோதி நிற்கிறது.

காரை ஓட்டி வந்து விபத்துக்குள்ளாக்கியது நடுத்தர வயது பெண்மணி ஒருவர். கடுப்பாகிப் போன நம்ம ஆட்டோ டிரைவர், ஏம்மா... சோக்கா ஒரு கார் வாங்கிட்டேனா, அத நம்ம வண்டி மேலதான் உட்டு டெஸ்ட் பண்ணுவியா? இரு போலீஸக் கூப்படறேன் என்கிறார்.

போலீஸும் வருகிறது... ஆனால், ஒரு நடவடிக்கையும் அந்தப் பெண் மேல் எடுக்கவில்லை. சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது காவல் துறை.. ஏய்யா காச வாங்கிட்டு கண்டுக்காம இருக்கலாம்னு நினைக்கிறீங்களா? என்று எகிறிய ஆட்டோ டிரைவர், உங்கள என்னப் பண்றேன் பாரு.. என கொதிக்கிறார்.

தொகுதி எம்எல்ஏ-க்கு போன் போட்டு போலீஸையும், அந்தப் பொம்பளையும் காலி பண்ணல எம் பேர மாத்திக்கறேன் என்று சவால் விடுகிறார். நெருங்கி வந்து ஆட்டோ டிரைவரிடம் ஒரு போலீஸ் சொல்கிறார் அந்த அம்மா, எம்எல்ஏ-வோட வீட்டுக்காரம்மாதான். அவருக்கா போன் போட்டு சொல்லப் போற என்றார்.

இப்படி ஒரு சம்பவம் மும்பை புறநகர் பகுதியில் நேற்று நடந்தது. டெலிவரி எடுத்த சில நிமிடங்களுக்குள் லம்போகினி ஹியூராகேன் காரை, ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார் அந்த ஊர் எம்எல்ஏ-வின் மனைவி. அப்போது எடுக்கப்பட்ட விடியோதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவுக்கு பெரிய அடி எதுவும் இல்லை. அதேவேளையில், லம்போகினி ஹியூராகேனின் பம்பர் பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Video: Watch This MLA's Wife Crash Her Huracan Within Minutes After Delivery!

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark