பரிசு கொடுக்க விலையுயர்ந்த காரை வாங்கிய அஜித்தின் ஜோடி நடிகை: யாருக்காக வாங்கினாங்க தெரியுமா...?
அஜித்திற்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல இந்தி திரைப்பட நடிகை விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் காரை பரிசாக வழங்குவதற்காக வங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

40 வயதைத் தாண்டியும் கதாநாயகியாக நடித்து வரும் வித்யாபாலன் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர், பிங்க் என்னும் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு இதுவே முதல் படம் ஆகும். இந்த படத்திற்கான காட்சிப் பதிவு தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1980களில் பிறந்தவர்களின் கனவு கன்னியாக வளம் வந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதையை கருவாகக் கொண்டு உருவான 'த டர்டி பிக்சர்' படத்தில், சில்க் சுமிதாவுடைய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, வித்யாபாலனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இதன் பின்னரே அவர் மிகவும் பிரபலமானார். மேலும், பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, அவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு மட்டும் ரூ. 6 கோடிக்கும் மேலாக சம்பளம் பெற்று வருகிறார். நம்ம ஊரில் சில ஹீரோக்களுக்குக்கூட இந்த சம்பளம் கிடையாது.

வித்யா பாலன், 40 வயதைக் கடந்தும் கதாநாயகியாக நடித்து வருவது பலரிடமும் வியப்பை ஏற்படுத்தினாலும், அவரின் துணிச்சல் மற்றும் சிறப்பான நடிப்பே தற்போதுவரை அவர் கதாநாயகியாக நீடிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. அவர் நடிப்பில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் மிகவும் தைரியமான பெண்ணாக செயல்பட்டு வருகிறார்.

பல இளைஞர்களின் மனதை நடிப்பால் கவர்ந்த வித்யாபாலன், தற்போது அனைவரின் இதயத்திலும் நீங்க இடத்தை பிடிக்கும் விதமாக ஓர் செயலைச் செய்துள்ளார். அந்த வகையில், அவரது தாய் மற்றும் தந்தை மீது அதிகம் பாசம் கொண்ட வித்யாபாலன், அவர்களின் சொகுசான பயணத்திற்காக மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும், இந்த புதிய மாடல் இ-கிளாஸ் சொகுசு காரில், கூடுதலாக தேவைக்கேற்ப சில ஆல்டரேஷன் சொகுசு வசதிகளையும் இணைத்துள்ளார். இதன்காரணமாக, இந்த காரின் விலை மேலும் கூடியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார், இந்தியாவில் ரூ. 59.12 லட்சம் என்ற விலையில், டெல்லி எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கின்றது. இது இந்த மாடலின் ஆரம்ப விலையாகும். இதன் ஹை வேரியண்ட் மாடலின் விலை ரூ. 73.21 லட்சமாக இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை தான்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷனில் கிடைக்கின்றது. இதில் வித்யாபாலன், அவரின் பெற்றோர்களுக்காக இ63 ஏஎம்ஜி என்ற மாடலைத் தான் வாங்கியுள்ளார். இந்த காரில், 4.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 612 பிஎச்பி பவரையும் 850 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

முன்னதாகவே கூறியதுபோல், வித்யாபாலன் கூடுதலாக இந்த காரில் சொகுசு மற்றும் நவீன வசதிகளைச் சேர்த்ததன் காரணமாக இந்த காரின் விலை ரூ. 1.50 கோடியாக அதிகரித்துள்ளது. இது சற்று அதிகம் தான். இருப்பினும், வயதானவர்கள் கலைப்பை உணராமல் பயணிக்கம் வகையில் பல்வேறு சொகுசு வசதிகள் இந்த கார் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வித்யாபாலனின் இந்த செயல் தற்போது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தாய் தந்தை மீது இவ்வளவு பாசம் கொண்டவரா என வித்யாபாலனின் ரசிகர்கள் மெய்சிலிர்த்துபோய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








