மசாஜ் சென்டருக்கு தனியா போகணும்ற அவசியமே இல்ல... அவ்ளோ சொகுசான காரை வாங்கிய நடிகை வித்யா பாலன்! இத்தன கோடியா!
பாலிவுட்ல இருக்கவங்க எல்லாரும் மிகப் பெரிய சொகுசு கார் பிரியர்கள்னு சொல்லலாம் போல. அந்த அளவிற்கே பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக லக்சூரி கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் முன்னணி பாலிவுட் நடிகை மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார். நடிகை வித்யா பாலன்-தான் அவர் ஆவார். இவர் மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 (Mercedes Maybach S580) சொகுசு செடான் ரக காரையே வாங்கி இருக்கின்றார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் அந்த காரில் பயணிக்கும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த பணக்காரர்களின் ஃபேவரிட் சொகுசு கார் மாடலாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 காட்சியளிக்கின்றது. பணக்காரர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகைச் சேர்ந்தவர்களிடத்திலும் இந்த கார் மாடலுக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக வித்யா பாலன் அந்த காரை வாங்கிய சம்பவம் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த கார் மாடலை அணில் கபூர், கங்கனா ரனாவத், ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானி உள்ளிட்ட பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையிலேயே தற்போது வித்யா பாலனும் இணைந்திருக்கின்றார்.
இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ. 2.72 கோடிக்கும் அதிகம் ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அதிக விலைக்கு ஏற்பவே மிக மிக அதிக சொகுசு வசதிகளை இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
அதிலும், மிக முக்கியமாக சொகுசாக டிராவல் செய்ய ஏதுவாக மசாஜ் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, அதிக மிருதுவாகவும் இந்த காரின் இருக்கைகள் இருக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து, கூடுதல் பிரீமியமான டிராவல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த காரில் பெரிய பொழுதுபோக்கு திரைகள், சாஃப்ட் டச் அனுபவத்தை வழங்கும் வசதிக் கொண்ட மெட்டீரியர்கள் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல வசதிகளையும், சிறப்புகளையும் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்க காரணமாக உள்ளது. எஞ்சின் விஷயத்திலும் இந்த கார் மிக சிறப்பானதாகவேக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 4.0 லிட்டர் பை-டர்போ வி8 மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 496 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இது ஓர் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட சொகுசு காராகவும் காட்சியளிக்கின்றது.
வித்யா பாலன் இடத்தில் இந்த கார் மட்டுமில்லைங்க இன்னும் பல விலை உயர்ந்த ஆடம்பர வகை கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz)-இன் மற்றுமொரு புகழ்பெற்ற தயாரிப்பான இ-கிளாஸ் (E-Class) செடான், ஜிஎல்சி (GLC) எஸ்யூவி ஆகிய கார் மாடல்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இவற்றின் வரிசையிலேயே வித்யா பாலன் தற்போது மேபேக் எஸ்580-யை இணைத்திருக்கின்றார்.
ஆனால், இதை அவர் எப்போது வாங்கினார் மற்றும் அவர் வாங்கியிருக்கும் காரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த காருக்காக அவர் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவழித்திருப்பார் என்பதை மட்டும் நம்மால் யூகிக்க முடிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய திரைப்பிரபலங்கள் சொகுசு கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக வித்யா பாலனம் 3 கோடி ரூபா காரை வாங்கிய சம்பவம் அமைந்திருக்கின்றது. இவரைப் போன்ற பிரபலங்களாலேயே நாட்டில் சொகுசு கார்களின் விற்பனை கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








