சாதாரண எலெக்ட்ரிக் காரை வாங்கனது அவர் பெத்த பொண்ணா! சும்மா பந்தா காட்டாம புத்திசாலித்தனமா யோசிக்கறாங்க...

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர். ஆனால் திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதைதான் வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு விதிவிலக்காக பிரபல நடிகை ஒருவர் தற்போது மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். அவர் வித்யுலேகா ராமன் (Vidyullekha Raman) ஆவார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில், வித்யுலேகா ராமன் நடித்து வருகிறார்.

இவர் பிரபல நடிகரான மோகன் ராமனின் (Mohan Raman) மகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர், நடிகைகள் எல்லாம் சொகுசு வசதிகள் நிரம்பிய விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்கி கொண்டுள்ள நிலையில், வித்யுலேகா ராமனோ, எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.

Vidyullekha Raman Buys MG Comet EV

இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 9.53 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது 4 பேர் மட்டுமே பயணம் செய்ய கூடிய, சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை ஓட்டுவது மிகவும் எளிது. அத்துடன் பார்க்கிங் செய்வதும் கூட மிகவும் எளிமையான ஒரு விஷயம்தான்.

MG Comet EV

இந்த 2 காரணங்களுக்காகவே எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை, வித்யுலேகா ராமன் வாங்கியுள்ளார். இதை இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில் அவரே தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கு 'குட்டி' என பெயர் சூட்டியிருப்பதாகவும், வித்யுலேகா ராமன் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே இந்த காருக்கு இது மிகவும் பொருத்தமான பெயர்தான்!

இதுதான் வித்யுலேகா ராமன் வாங்கியுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதற்கு முன்னதாக எந்தவொரு எலெக்ட்ரிக் காரையும், அவர் வாங்கியதில்லை. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 17.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 230 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 10.25 இன்ச் அளவில், 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர இன்னும் நிறைய வசதிகளும், இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இதில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் கீலெஸ் எண்ட்ரி போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக எம்ஜி கோமெட் இவி கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தினமும் கார் ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கலாம். பார்க்கிங் செய்வது எளிமையானது என்பது இதன் கூடுதல் பலம். ஒட்டுமொத்தத்தில் தினமும் அலுவலகம் செல்பவர்கள், அடிக்கடி ஷாப்பிங் செல்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 5, 2024, 14:00 [IST]
English summary
Vidyullekha raman buys mg comet ev viral video
மேலும்... #off beat #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+