சாதாரண காரில் வந்தது இந்த நடிகரா? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரு
பொதுவாக நடிகர்கள் என்றால் காஸ்ட்லியான கார்களை தான் பயன்படுத்துவார்கள். அப்பொழுது தான் அவர்களது ரசிகர்கள் அதிகம் அதை பற்றி பேசுவார்கள். அவரை பற்றி பேச்சு சமூகத்தில் அதிகமாக இருக்கும். அதே நேரம் இந்த காஸ்ட்லியான கார்கள் அவர்களுக்கான வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும். அதே நேரம் சில நடிகர்கள் என்னதான் தனது ஸ்டார் அந்தஸ்து இருந்தாலும் சிம்பிளாக தங்களை காட்டிக்கொள்வார்கள். இப்படியாக நடிகர் ஒருவர் சாதாரண காரில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவர் நடித்த பல படங்கள் தெலுங்கு சினிமா உலகில் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்த திரைப்படங்களில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டதால் தமிழ் சினிமா உலகிலும் இவர் பிரபலமானராக இருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் சாதாரணமாக கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் காரிலிருந்து ஒருவர் வருகிறார். முதலில் பார்க்க ஆள் அடையாளமே தெரியாதது மாதிரி இருக்கிறது. அவர் அருகில் வர வர தான் அது விஜய் தேவர்கொண்டா என தெரிகிறது. அந்த அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். அவரது அடுத்த படத்திற்கான கெட்டப் மாற்றத்திற்காக இந்த ரீதியில் இருக்கிறார் என பரவலாக பேசப்படுகிறது. இவர் இறங்கி வந்த கார் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா கார் ஆகும்.
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா காரை பொருத்தவரை மொத்தம் 7 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ23.85 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ31.86 லட்சம் என்ற விலையி்ல விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்த இன்ஜின் 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் நீடித்த உழைப்பு, நம்பகதன்மை மற்றும் அதிக இடவசதிக்காக பெயர் பெற்றது. அதே நேரத்தில் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளன. இதனால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறனர். இது போக இந்த காரில் டீசல் இன்ஜின் இருப்பதால் அதிக பவர் கொண்ட இன்ஜின்களில் இந்த கார் வடிவமைக்கப்படுகிறது. இந்த கார் அதிக பிராக்டிக்கல் அம்சம் கொண்ட கார் என்பதால் பிரபலங்கள் பலர் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.
இது போக இந்த காரில் இரண்டாம் வரிசை சீட்கள் கேப்டன் சீட்களாக வடிவமைக்கப்படும் ஆப்ஷன்களிலும் வரருகிறது. பிரபலங்களுக்கு இது பிடித்தமான ஆப்ஷனாக இரகு்கிறது. 8 சீட்டர் காரில் தான் இரண்டாம் வரிசை சீட் பென்ச் சீட்களாக உள்ளன. நீண்ட தூர பயணங்களுக்க ஏற்றவகையில் அதிக இடவசதியுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பாதுகாப்புஅம்சங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிரைவரின் முட்டி பகுதி உள்ளிட்ட 7 இடங்களில் ஏர்பேக்குகுள் உள்ளன. இது போக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் அம்சமும் இருக்கிறது. இந்த கார் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய மக்களின் தேவைகளுக்கு ஏற் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. அதில் இன்னோவா கிரைஸ்டா கார் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற காராக இருக்கிறது. இதனால் பல பிரபலங்கள்கூட இந்த காரை பயன்படுத்துகிறார்கள்.அதனால் நடிகர் விஜய் தேவர்கொண்டா இந்த காரை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.


Click it and Unblock the Notifications









