G.O.A.T படத்தில் விஜய் ஓட்டி வரும் பைக் இது தானா? யாருக்குமே தெரியாத குறியீடுகள் இதுல இருக்குதா?
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி படம் வரும் படம் இந்த The Greatest of All Time இந்த திரைப்படத்தின் முதல் பார்வை புகைப்படங்கள் புத்தாண்டை முன்னிட்டு வெளியான நிலையில் அதில் நடிகர் விஜய் ஓட்டி வரும் பைக் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைப் பற்றி தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
தமிழ் சினிமாவின் மிக உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதன் மூலம் இந்த திரைப்படத்தின் பெயர் The Greatest of All Time என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதில் நடிகர் விஜய் பைக் ஓட்டிக்கொண்டே துப்பாக்கியை சுடுவது போல புகைப்படம் இருந்தது. பைக் பின்னாலும் மற்றொரு விஜய் அமர்ந்திருப்பது போல நமக்கு தெரிகிறது. பைக் வேகமாக பயந்து கொண்டிருப்பதால் அதை தெரிவிக்கும் வகையில் டிசைனை ப்ளர் செய்த படி வெளியிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது பலர் இது ஒரு விமான சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் என்றும் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தெரிந்தது. மேலும் இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கலாம் எனவும் பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது போஸ்டர் வெளியான போது அவர் ஓட்டி வரும் பைக் குறித்த தேடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் விஜய் பைக் ஓட்டி வருவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், அவர் என்ன பைக்கை ஓட்டி வருகிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. இதனால் பலர் இது குறித்து ஆர்வமாக தேடி வருகின்றனர். நமக்கு தெரிந்தவரை இந்த பைக் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஓட்டி வருவதாக வெளியான பைக் குறித்த புகைப்படம் மிக வித்தியாசமான புகைப்படமாக இருந்தது.
இந்த பைக்கின் முன்பக்கம் உள்ள மட்கார்டு சற்று மேலே தள்ளி இருந்ததால் இது ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த அட்வெஞ்ச்சர் பைக்காக இருக்கலாம் என தெரிகிறது. இந்த பைக்கின் முன்பக்க வீல் நமக்கு தெளிவாக தெரிகிறது. இதில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் ஹேண்டில் பாரை பொருத்த வரை இது ஒரு அட்வெஞ்ச்சர் ரக பைக் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. க்ரூஸர் ரக பைக் இல்லை என்பதும் தெரிகிறது.
இந்த பைக்கின் டேங்க் பகுதி பின்பக்க பகுதிகள் சைலென்சர் பகுதி எதுவும் தெளிவாக தெரியாததால் நாம் இது எந்த ரக பைக் என கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இந்த திரைப்படம் குறித்து அனுமானம் செய்த பலர் இதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் என குறிப்பிட்டுள்ளதால் இது ஒரு கற்பனை பைக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். கற்பனை செய்து இந்த பைக்கை கஸ்டமைஸ்டு செய்து உருவாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விஜய் அமர்ந்து இருப்பது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த பைக்கின் பின்பக்கம் மற்றொரு விஜய் அமர்ந்திருப்பது போல தெரிகிறது. ஆனால் அவர் உருவத்தை பார்க்கும்போது அது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்ட உருவம் என தெரிகிறது. இந்த திரைப்படத்தில் இந்த பைக் ஒரு முக்கிய இடம் பெறும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த படம் திரைக்கு வரும் போது நமக்கு இந்த பைக் குறித்த ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்க பெறும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருவதால் இது தாய்லாந்தில் உள்ள ஏதாவது அட்வெஞ்சர் பைக்காக இருக்கலாம் என தேடி பார்த்த போதும் இப்படியான பைக் எதுவும் அந்நாட்டில் விற்பனைக்கு இல்லை என நமக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் இந்த பைக் குறித்த முழுமையான தகவல் யாரிடமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் The Greatest of All Time என்ற திரைப்படத்தில் முதல் லுக் போஸ்டரிலேயே இந்த பைக் இடம் பெற்றிருப்பது. இந்த பைக்குக்கான முக்கியத்துவத்தை இந்த பைக் படத்தில் இருப்பதை காட்டுகிறது. இந்த பைக் குறித்து தெரிந்து கொள்ள பல ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதே போல நாமும் ஆர்வமாக இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications








