கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
நடிகர் விஜய் சினிமா படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றபோது அவர் வருகையை அறிந்து ரசிகர் பலர் கூடிய நிலையில், ரசிகர் கூட்டத்திற்கு உள்ளே கார் சென்றதால் அவர் பயணித்த கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் உச்சம் நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கோட் (G.O.A.T) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் இவர் கட்சி துவங்குவதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது இவர் தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநில இளைஞர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படும் நபராக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று கேரள மாநிலத்திற்கு சென்றார். சென்னையில் இருந்து கிளம்பியவர், திருவனந்தபுரம் வரை விமானத்தில் சென்று அங்கிருந்து கார் மூலம் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். இவரது வருகையை அறிந்த கேரள ரசிகர்கள் இவரை பார்ப்பதற்காக இவர் செல்லும் பாதையை மற்றும் விமான நிலையங்களில் கூட்டமாக கூடி நின்றார்கள். இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவு கூட்டம் இருந்தது.
யாரும் எதிர்பாராத வகையில் கூட்டம் கூடியதால் அதை சமாளிக்க முடியாமல் கேரள மாநில போலீசார் திணறினார்கள். இதற்கிடையே கூட்டத்திற்கு நடுவில் இவர் பயணம் செய்து கொண்டிருந்த கார் சென்று கொண்டிருந்தது. இவரது காரை துரத்திக் கொண்டே ரசிகர்கள் பலர் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பதிலாக பரவி வருகின்றன.

இப்படியாக வெளியான வீடியோ ஒன்றில் தன்னை பைக்கில் துரத்தி செல்போனில் வீடியோ எடுத்து வரும் ரசிகர் ஒருவரை பார்த்து நடிகர் விஜய் சாலையை பார்த்து கவனமாக செல்லுங்கள் என சைகையில் அறிவுறுத்தும் வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இவர் பயணித்த டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிளாஸ் கார் ரசிகர்கள் மத்தியில் சிக்கியதால் ரசிகர்கள் அந்த காரை சூழ்ந்து கொண்டனர். இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.
நடிகர் விஜய் பயணித்த கார் ரசிகர் கூட்டத்திற்கு இடையே சிக்கி சேதம் அடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர் கூட்டம் கூடியதால், இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பதிவாகியுள்ள காரின் பதிவு எண்ணை வைத்து நாம் பரிவாகன் தளத்தில் தேடும் போது சில சுவாரசியமான தகவல் நமக்கு கிடைத்தது.
கேரளாவில் நடிகர் விஜய் பயணித்தது டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் காராகும். இது இது இசட்எக்ஸ் என்ற டாப் வேரியன்ட் காராகும். இந்த கார் 7 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையிலான சீட்டிங் அமைப்புகளை கொண்ட காராக இருக்கிறது. இந்த காரை அதன் உரிமையாளர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி தான், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்டிஓ வில் பதிவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட கார் வாங்கி 4 மாதம் தான் ஆகிறது, அதுவும் இந்த கார் பைனான்ஸ் முறையில் வாங்கப்பட்ட காராக இருக்கிறது. புதிய கார் என்பதால் இந்த காரில் உள்ள அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கின்றன. இன்சூரன்ஸ் முதல் புகை சான்று வரை எல்லாம் சரியாக இருக்கிறது. புதிதாக கார் வாங்கி நான்கே மாதத்தில் இந்த காரில் நடிகர் விஜய் பயணித்ததால் தற்போது சேதமாகியுள்ளது.
இந்த காரை சரி செய்வதற்கு இன்சூரன்ஸ் மூலம் கிளைம் செய்ய முடியுமா என்பதை அந்த காருக்கு இன்சூரன்ஸ் வழங்கிய நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும். இது குறித்து காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்து அதன் பின்னர் தான் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியும் என தெரிகிறது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த காரின் விலையை பொறுத்தவரை திருவனந்தபுரத்தில் இந்த காரை வாங்கினால் ரூபாய் 38.66 லட்சம் ஆன் ரோடு விலையாக வருகிறது. இவ்வளவு அதிகமான விலை வருவதற்கு முக்கியமான காரணம் இந்த கார் ஒரு ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார் என்பதால்தான். ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இஞ்சினைப் பொறுத்தவரை 1987 சிசி பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மைல்டு ஹைபிரிட் ரக காராகும். இந்த காரின் எஞ்சின் 183.72 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் மைலேஜ் பொறுத்தவரை லிட்டருக்கு 23.24 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் கார் இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் பயன்படுத்தும் காராக இருக்கிறது. இந்த காரில் உள்ள பல்வேறு பிராக்டிகல் அம்சங்கள் காரணமாகவும், அதிக இட வசதி காரணமாகவும், பிரபலங்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் பலர் இந்த காரை பயன்படுத்தி வருகிறார்கள். நடிகர் விஜய் பயன்படுத்திய இந்த கார் சேதமானது நிச்சயம் வருந்தத்தக்க ஒரு விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









