மலைக்க வைக்கும் விஜய் மல்லையாவின் பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

Written By:

நாட்டின் பெரும் புள்ளிகளில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா தனது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கிய பல ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்த தவறியதால், கடன் ஏய்ப்பாளராக சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், பெரும் கடன் சுமையில் சிக்கிய அவர் தனது மதுபான தயாரிப்பு குழுமமான யுனைடைட் ஸ்பிரிட்ஸ் குழுமத்தின் பங்குகளை டியாகோ என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் விற்றுவிட்டார்.

இந்த நிலையில், கடன் சுமை கழுத்தை நெருக்கிய நிலையில், பல நெருக்கடிகளுக்கு உள்ளான அவர் யுனைடைட் புரூவரீஸ் குழுமத்தின் தலைவர் பதவியை ராஜினமாக செய்வதாக அறிவித்திருக்கிறார். மிக ஆடம்பரமாக வாழ்த்த விஜய் மல்லையாவின் சொத்துக்கள் பலவும் வங்கிகளால் பறிமுதல் செய்யப்பட்டு விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த நிலையில், அவர் பயன்படுத்திய தனி நபர் விமானங்கள், ஆடம்பர படகுகள், சொகுசு கார்கள் மற்றும் விண்டேஜ் கார் கலெக்ஷன் குறித்த அவரது மலைக்க வைக்கும் மோட்டார் உலகம் பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மல்லையா விமானம்

மல்லையா விமானம்

பல தனி நபர் பயன்பாட்டு விமானங்களை மல்லையா பயன்படுத்தினார். அதில், ஹாக்கர் எச்எஸ் 125 -700பி என்ற விமானம் மும்பை விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அது பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்ததால், மிக மோசமான நிலையில் இருந்தது. இந்தநிலையில், பல கோடி மதிப்புடைய அந்த விமானத்தை வெறும் 22 லட்சத்திற்கு சைலென்ட் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது.

Photo Credit: Mid-day

11 சீட்டர்

11 சீட்டர்

ஹாக்கர் எச்எஸ்125 700பி மாடல் விமானத்தில் 11 பேர் வரை செல்ல முடியும். இந்த விமானத்தை மல்லையா அதிகளவில் பயன்படுத்தி வந்தார்.

Photo Via- Daily bhaskar

பழைய விமானம்

பழைய விமானம்

30 ஆண்டுகள் பழமையான அந்த விமானத்தை ஓபராய் குழுமத்திடமிருந்து விஜய் மல்லையா வாங்கினார். அந்த விமானத்தை உள்நாட்டு பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்தினார்.

Picture credit: aceebee/Wiki Commons

இதர விமானங்கள் - போயிங் 727

இதர விமானங்கள் - போயிங் 727

போயிங் 727 விமானத்தையும் அவர் பயன்படுத்தினார். இந்த விமானம் அவரது பறக்கும் அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. மேலும், உலகம் முழுவதும் இருக்கும் அவருக்கு சொந்தமான இடங்களுக்கு செல்வதற்கும் இதனை பயன்படுத்தினார்.

ஏர்பஸ் ஏ319 ஏசிஜே

ஏர்பஸ் ஏ319 ஏசிஜே

மிகவும் பிரம்மாண்டமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருந்த இந்த விமானத்தை நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தினார். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடைநில்லாமல் பறக்கும் வல்லமை கொண்டது. 40 மில்லியன் டாலர்களுக்கு வாங்கிய இந்த விமானத்தை பல மில்லியன் டாலர்களை செலவிட்டு உட்புறத்தில் கஸ்டமைஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Via- Bornrich

கல்ஃப்ஸ்ட்ரீம்- 3

கல்ஃப்ஸ்ட்ரீம்- 3

1990ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த விமானம் அவரது குறைந்த தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இதுவும் உட்புறத்தில் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் மட்டுமில்லை, ஆடம்பர படகுகளையும் அவர் பயன்படுத்தி வருகிறார். அவற்றை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

இன்டியன் எம்ப்ரெஸ் படகு

இன்டியன் எம்ப்ரெஸ் படகு

311 அடி நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட ஆடம்பர படகு கத்தார் நாட்டு அரச குடும்பத்தினருக்காக 2000ல் கட்டப்பட்டது. அதன்பிறகு, இதனை மல்லையா வாங்கி இன்டியன் எம்ப்ரெஸ் என்று பெயரிட்டார். இதனை 93 மில்லியன் டாலர் விலையில் அவர் வாங்கி பயன்படுத்தி வந்தார். ஹெலிபேட், ஜிம், பொழுதுபோக்கு வசதிகள், சொகுசான படுக்கையறைகள் என இதில் இல்லாத சொகுசு வசதிகளே இல்லை எனலாம். மல்லையாவின் பல தடபுடல் விருந்து நிகழ்ச்சிகள் இதில் நடந்தன. வாடகைக்கும் விடப்பட்டது.

இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

இன்டியன் எம்ப்ரெஸ் படகில் 20 பணியாளர்கள் இருந்தனர். 32 விருந்தினர்கள் தங்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,700 கிமீ தூரம் பயணிக்கும், 26.5 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். உலகின் 32வது மிகப்பெரிய ஆடம்பர படகு என்ற பெருமையும் இதற்கு உண்டு.

விண்டேஜ் படகு

விண்டேஜ் படகு

உலகின் மிகவும் பாரம்பரியமான படகுகளில் ஒன்றான கலீஸ்மாவையும் இவர் வாங்கி வைத்துள்ளார். 1906ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த படகை 1995ம் ஆண்டு 3 மில்லியன் டாலர்களை செலவிட்டு புனரமைப்பு செய்துள்ளார் மல்லையா.

Image Via- Yachtsolutions.com

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த கலீஸ்மா படகில் படுக்கையறைகள், சாப்பாட்டுக்கூடம், சலூன் உள்ளிட்ட பல வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த படகு மட்டுமில்லை, மல்லையாவிடம் பல விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை பயன்படுத்தினார். அதில், ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ உள்ளிட்ட கார்களும் அடக்கம். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

Image Via- Yacht Solutions.com

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் இல்லாத பெரும் பணக்காரர்கள் இல்லை. அதிலும், கார் பிரியரான விஜய் மல்லையாவிடம் இல்லாமல் இருக்குமா. அவரிடம் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் உள்ளது. தினசரி பயன்பாட்டுக்கு அதிக அளவில் பயன்படுத்துவது இந்த காரையே.

Image Via- Indiatimes

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே கார் ஒன்றையும் விஜய் மல்லையா வைத்திருக்கிறார். உலகின் மிக அழகிய வடிவமைப்புடைய சொகுசு கார்களில் இதுவும் ஒன்ராக குறிப்பிடப்படுகிறது. இதே காரை ரத்தன் டாடாவும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

பாராளுமன்ற எம்பி.,யாக இருந்தபோது அவர் டெல்லியில் தினசரி பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ எஸ் க்ளாஸ் காரையே. மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ220 எஸ் க்ளாஸ் கார்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் ஆஸ்தான மாடலாக இருந்தது. அதுமட்டுமில்லை, இவர் கார், படகு ரேஸ் பிரியர். அதன் விளைவு.

ஃபார்முலா 1 கார் பந்தய அணி

ஃபார்முலா 1 கார் பந்தய அணி

ஃபோர்ஸ் இன்டியா என்ற பெயரில் ஃபார்முலா 1 கார் பந்தய அணியையும் துவங்கினார். கார் பந்தயம் மட்டுமில்லை, படகு பந்தயங்களிலும், குதிரை பந்தயங்களிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.

வாடகை காரிலும்....

வாடகை காரிலும்....

மிக ஆடம்பரமாக வாழ்ந்தாலும், அவர் ஆடம்பர காரிலும் பயணித்திருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உபேர் டாக்சியில் பயணித்திருக்கிறார். அப்போது செல்லப் பிராணியை காரில் உடன் கொண்டு வருவதற்கு உபேர் டாக்சி ஓட்டுனர் எதிர்ப்பு தெரிவித்ததை ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கெல்லாம் மேலே ஒரு படி, அவரது கார் ஆர்வத்தை தெரிந்துகொள்ள அடுத்தடுத்த ஸ்லைடுகளில் அவரது பிரம்மாண்டமான விண்டேஜ் கார் கலெக்ஷனை கண்டு ரசிக்கலாம்.

மலைக்க வைக்கும் விண்டேஜ் கார் கலெக்ஷன்

மலைக்க வைக்கும் விண்டேஜ் கார் கலெக்ஷன்

மலைக்க வைக்கும் மல்லையாவின் விண்டேஜ் கார் கலெக்ஷனை காண்பதற்கு இங்கே க்ளிக் செய்க.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here we present to you some of the most fascinating motor collection of Vijay Mallya.
Please Wait while comments are loading...

Latest Photos