ரோட்டிற்கு வந்த விஜய் மல்லையாவின் கார்! ஓட்டிட்டு போனவர உத்து பார்த்தா மிரண்டு போயிடுவீங்க!
இந்தியாவில் பெரும் பணக்காரராக இருந்து வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கார் ஒன்று தற்போது மும்பை சாலையில் காணப்பட்டது. இந்த காரை ஓட்டி வந்தவர் பெரிய பிரபலமாக இருக்கிறார். விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கார் எப்படி இவர் வசம் வந்தது? இந்த காரில் அப்படி என்ன விசேஷமான விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. இவர் சொகுசான வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர். இவர் இந்தியாவில் இருக்கும் போது இவரது லைஃப் ஸ்டைல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பலர் இவரது வாழ்க்கை முறையை பார்த்து பொறாமை கூட பட்டுள்ளார்கள். இவர் பயன்படுத்தும் எல்லாமே காஸ்டலியாகவோ அல்லது அரிதான ஒரு விஷயமாகவோ தான் இருக்கும்.

இப்படியாக இவர் பயன்படுத்திய கார் தான் ஃபெராரி நிறுவனத்தின் 328 ஜிடிஎஸ் ரக கார். இந்த கார் கடந்த 1985ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கார் ஆகும். இந்த காரை வெகு சில தான் வைத்திருக்கிறார். இந்த கார் மிக அரிய வகை கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரை விஜய் மல்லையா வைத்திருக்கும் போதே பெரிய பரபலமானது. பலர் இந்த காரை பற்றி பேசினார். ஆனால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். தற்போது லண்டனில் மல்லையா பதுங்கியுள்ளார்.
இந்நிலையில் அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அரசு இருக்கிறது. இந்தியாவில் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவருக்கு சொந்தமான இந்த காரும் முடக்கப்பட்டுள்ளது. இந்த காரை முடங்கிய நிறுவனம் அதை ஏலத்தில் விட்டுள்ளது. இந்த காரை தற்போது மும்பையை சேர்ந்த பரோடா என்ற ராஜ குடும்பத்தை சேர்ந்த பிரதாப் சிங் கெய்க்வாட் என்பவர் சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வருகிறார். இவர் இந்த காரை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஃபெராரி 328 ஜிடிஎஸ் காரை பொருத்தவரை 3.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு வி8 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் காருக்கு 270 பிஎச்பி பவரையும் 304 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த கார் அதிகபட்சமாக 267 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. தற்போது உள்ள ஃபெராரி கார்களின் பெர்ஃபார்மென்ஸை பார்க்கும் போது இது சாதாரணமாக தெரியலாம். ஆனால் அந்த காலத்தில் மிக வேகமாக இயங்கும் கார்களில் இதுவும் ஒன்று.
இந்த காரை தற்போது வைத்திருப்பவர் பிரதாப் சிங் கெய்க்வாட், இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்போது கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இது மட்டுமல்ல பரோடா ராஜ குடும்பத்தின் கெய்க்வாட் சமூகததின் அடுத்த முடிசூடா இளவரசராக இருக்கிறார். அடுத்த மகாராஜாவாக இவர் தான் பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வாகனங்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். பல வித்தியாசமான கார்களை சொந்தமாக வைத்திருக்கிறார்.

இவரிடம் இந்த ஃபெராரி 328ஜிடிஎஸ் கார் போக, ஆஸ்டான் மார்டின் டிபிஎ், போர்ஷே 991 ஜிடிஎஸ் 3 ஆர்எஸ், 1978 டட்சன் 280இடசட், பென்ட்லி ப்ரூக்லேண்ட் கூபே, போர்ஷே கேயன், மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் 65 ஏஎம்ஜி உள்ளிட்ட கார்கள் இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் அரிய வகை கார்களாக இருக்கிறது. இவர் அரிய வகை கார்களாக பார்த்து சொந்தமாக வாங்கி வருகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஜய் மல்லையா தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் அவரது சொத்துக்கள் எல்லாம் பறி முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த அரிய வகை கார் தற்போது யாரிடம் இருக்கிறது? செயல்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் பொது வெளியில் இந்த கார் வந்து பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









