ஏலத்திற்கு வருகிறது விஜய் மல்லையாவின் தனி விமானம்... இன்டீரியரை பார்த்தா அசந்து போவீங்க!

By Saravana

வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி கடனை பெற்று ஏப்பம் விட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா பயன்படுத்திய அந்த தனி விமானத்தை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தை ஏலம் விடுவதற்கான உத்தரவை விரைவில் பிறப்பிக்க கடன் வசூல் தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில், கடனை திருப்பி செலுத்த வழி தெரியாமல் தவிக்கும் விஜய் மல்லையின் அந்த ஏர்பஸ் விமானத்தின் இன்டீரியர் படங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டிருக்கிறது. பார்ப்போரை வியக்க வைக்கும் அந்த படங்களையும், தகவல்களையும் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

விமான மாடல்

விமான மாடல்

ஏர்பஸ் ஏ-319 போயிங் விமானத்தில் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை செய்து விஜய் மல்லையா பயன்படுத்தி வந்தார். வியாபார விஷயமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல இந்த விமானத்தைத்தான் பயன்படுத்தினார்.

பதிவு

பதிவு

இந்த ஏர்பஸ் விமானம் 2006ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. VT- VJM என்ற விஜய் மல்லையாவின் இனிஷியலில் இந்த விமானம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வரி பாக்கி

வரி பாக்கி

கடந்த 2013ம் ஆண்டு இந்த விமானம் பறிமுதல் செய்யப்பட்டது. சேவை வரி பாக்கி வைத்ததற்காக இந்த விமானத்தை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

குத்தகை விமானம்

குத்தகை விமானம்

இந்த விமானம் சிஜே லீஸிங் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. கிங்பிஷர் நிறுவனத்தின் பெயரில் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

மதிப்பு

மதிப்பு

ஏர்பஸ் ஏ319 விமானம் கார்ப்பரேட் ஜெட் விமானம் 70 மில்லியன் டாலர் முதல் 90 மில்லியன் டாலர் வரை விலை மதிப்பு கொண்து. மல்லையாவின் விமானம் 88.6 மில்லியன் டாலர் மதிப்பு சொல்லப்படுகிறது.

பராமரிப்பு

பராமரிப்பு

இது தனி நபர் விமானமாக இருந்தாலும், மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்து வந்தது.

இடவசதி

இடவசதி

இந்த தனி நபர் ஜெட் விமானத்தில் 6,000 கியூபிக் அடி பரப்பு இடவசதியை அளிக்கிறது. அதில், ஏராளமான வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

சகல வசதிகள்

சகல வசதிகள்

சகல வசதிகள் கொண்ட இந்த தனி விமானத்தில் 22 விருந்தினர்கள் பயணிக்க முடியும். இந்த விமானத்தில் சகல வசதிகளும் உள்ளன.

சேட்டிலைட் டிவி

சேட்டிலைட் டிவி

மல்லையா பயன்படுத்திய இந்த ஏர்பஸ் கார்ப்பரேட் ஜெட் விமானத்தில் சேட்டிலைட் டெலிவிஷன் வசதியும் உள்ளது. இதனால், எங்கு பறந்து கொண்டிருந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தங்கு தடை இல்லாமல் பார்க்க முடியும்.

பொழுதுபோக்கு வசதிகள்

பொழுதுபோக்கு வசதிகள்

இந்த விமானத்தில் வீடியோ கேம் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. இந்த விமானத்தில் பெரிய அளவிலான பார் வசதியும் கொண்டது.

அசந்து போய்விட்டீர்களா?

அசந்து போய்விட்டீர்களா?

மல்லையா விமானத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட இன்டீரியரை பார்த்து நிச்சயம் அசந்து போயிருப்பீர்கள். இந்த விமானத்தின் தொழில்நுட்ப சிறப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

நடுத்தர வகை குடும்பம்

நடுத்தர வகை குடும்பம்

ஏர்பஸ் ஏ320 குடும்ப வரிசையில் வெளியிடப்பட்ட குறுகலான உடற்கூடு அமைப்புடைய ரகத்தை சேர்ந்த விமானம். குறைந்த மற்றும் நடுத்தர தூர பயணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. 1988ம் ஆண்டு பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

மல்லையா விமானம் 22 விருந்தினர்கள் இருப்பதற்கான வசதி கொண்டதாக தெரிவித்தோம். ஆனால், இந்த விமானத்தில் சாதாரண ரக இருக்கைகளை பொருத்தினால் 124 பேர் வரை பயணிக்க முடியும்.

வேகம்

வேகம்

இந்த விமானம் 41,000 அடி உயரம் வரை பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 871 கிமீ வேகம் வரை செலுத்த முடியும். சராசரியாக மணிக்கு 828 கிமீ வேகத்தில் பறக்கும்.

பயண தூரம்

பயண தூரம்

கார்ப்பரேட் ஜெட் விமானத்தில் கூடுதல் எரிபொருள் டேங்க்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன்மூலமாக, இடைநில்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் வசதி கொண்டது. இதன்மூலமாக 11,000 கிமீ தூரம் வரை பறக்கும். 30,000 லிட்டர் எரிபொருளை நிரப்பிச் செல்ல முடியும்.

பயன்பாடு

பயன்பாடு

பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, தனி நபர் பயன்பாடு என மூன்று விதமான பயன்பாடுகளுக்கு இது உகந்ததாக இருக்கிறது.

உற்பத்தி

உற்பத்தி

இதுவரை 1,453 ஏர்பஸ் ஏ-319 விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ரகத்தில் மிகவும் வெற்றிகரமான மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது.

முகேஷ் அம்பானியிடம் மட்டும்

முகேஷ் அம்பானியிடம் மட்டும்

ஏர்பஸ் ஏ319 கார்ப்பரேட் ஜெட் விமானம் தற்போது இந்தியாவில் முகேஷ் அம்பானியிடம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பறிமுதல்

பறிமுதல்

கடந்த 2013ம் ஆண்டு இந்த விமானத்துடன் சேர்த்து, மல்லையாவுக்கு சொந்தமான 5 உள்நாட்டு சேவை விமானங்களும், 2 ஹெலிகாப்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் மல்லையாவின் மோட்டார் உலகம்

விஜய் மல்லையாவின் மோட்டார் உலகம்

வியக்க வைக்கும் விஜய் மல்லையாவின் மோட்டார் உலகம் - சிறப்புத் தொகுப்பை படிக்க க்ளிக் செய்க.

Photo Credit: Indian Express

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Vijay Mallya’s Personal Jet up for Auction; Here’s how it looks.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X