அவரது மரணத்தை அவரே தேடிக்கிட்டார்... எல்லாத்துக்கும் ராசி பார்த்த முன்னாள் முதல்வரின் கடைசி விமான பயணம்!!
அகமதாபாத்தில் நடந்துள்ள ஏர் இந்தியா (Air India) விமான விபத்து பல சந்தேகங்களையும், பல ஆச்சிரியங்களையும் கிளப்பி உள்ளது. முதலில் சந்தேகங்களை பற்றி பார்த்துவிடுவோம். இந்த விமான விபத்துக்கு காரணமாக இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறுவது என்னவென்றால், பறவைகள் மோதியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்பதாகும். பறவைகள் மோதுவதினால் விமானத்தில் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, விமானத்துடன் மோதும் பறவையின் உடல் விமானத்தின் என்ஜினில் சிக்கும்போது என்ஜின் விசிறிகளை சேதப்படுத்தி விமானத்தை விபத்தில் சிக்க வைக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆனால், பறவைகளினால் தான் அகமதாபாத் விமான விபத்து நடந்திருக்கலாம் என கூறுவதை ஏன் நம்ப முடியவில்லை என்றால், முதலில் இந்த விபத்து நடந்திருப்பது விமான நிலையத்திற்கு அருகாமையில் ஆகும். இந்தியாவில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகிலும் பறவைகளினால் விமான போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக விமான நிலையத்தை சுற்றி குறிப்பிட்ட தொலைவிற்கு பறவைகள் பறக்காதப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து விமான நிலையங்களிலும் பின்பற்றப்படுகின்றன.

ஆதலால், டேக்-ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைகள் சிக்கி விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுவது நம்பும்படியாக இல்லை. மேலும், DGCA-இன் இந்த கூற்று வேறு தவறை மறைப்பதற்காக கூட இருக்கலாம். ஏனெனில், அகமதாபாத் விமான விபத்து நடந்ததில் இருந்து இந்த விபத்துக்கு காரணம் ஆக ஒரு பேச்சு இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், விமானம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதாகும்.
ஏர் இந்தியா சேவையில் இருந்த இந்த விமானத்தை உருவாக்கிய போயிங் (Boeing) நிறுவனத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பே இந்த விமானத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறியிருந்தார். விமானத்தின் கட்டமைப்பில் சில குறைப்பாடுகள் இருப்பதாகவும், இதனால் விமானிகளுக்கு சரியான தகவல்கள் கிடைக்காமல் போக கூடும் என்றும் அவர் அப்போது எச்சரித்து இருந்தார்.

ஆனால், வழக்கம்போல அவர் கூறியதை பலரும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த பிரச்சனைகள் பெரியதாகி தற்போது விபத்தில் சென்று முடிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதுபோல், விபத்திற்குள்ளான இந்த போயிங் விமானத்தில் சில மணிநேரங்களுக்கு முன் டெல்லியில் இருந்து பயணம் செய்த பயணிகள் சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோக்களில், பயணத்தின்போது விமானத்தின் செயல்பாடுகள் அசாதாரணமானவைகளாகவும், விசித்திரமாகவும் இருப்பதாக அந்த பயணிகள் தெரிவித்து இருந்தனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பல சந்தேகங்கள் எழுகின்றன. சரி, இந்த விமான விபத்தில் நடந்த ஆச்சிரியமான விஷயங்கள் என்று பார்த்தால், முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானியின் பயணம் ஆகும். விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸில் இலண்டனில் உள்ள மகளை பார்ப்பதற்காக விஜய் ருபானி சென்றுள்ளார்.

முன்னாள் குஜராத் முதலமைச்சரான விஜய் ருபானிக்கு பிடித்த எண் '12' ஆகும். அதேபோல், 6ஆம் எண்ணும் இவருக்கு ராசியான எண் ஆகும். ராசி, நாள், நட்சத்திரம் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைப்பிடிக்கக் கூடியவரான விஜய் ருபானி தான் வாங்கிய கார்கள் மற்றும் பைக்குகள் பலவற்றிற்கு '1206' என்கிற வாகன பதிவெண்ணை கொடுத்துள்ளார்.
இதனால்தான், ஆண்டின் 6ஆம் மாதமான ஜூனின் 12ஆம் தேதியில் இந்த விமான பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு விஜய் ருபானி மேற்கொண்டிருக்க கூடும். இவ்வளவு ஏன், விமானத்தில் இவர் அமர்ந்த இருக்கையின் எண் 12 மற்றும் விமானத்திற்குள் செல்வதற்கான போர்டிங் பாஸை இவர் பெற்றுக் கொண்ட நேரமும் மதியம் 12:10 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்லா விஷயங்களிலும் ராசியான '12' மற்றும் '6' எண்களை கடைப்பிடித்தவருக்கு கடைசியில் அதே ராசி எண்களினால் மரணம் ஏற்பட்டு இருப்பது மிகவும் ஆச்சிரியப்படுத்தக்கூடிய தற்செயலாக அமைந்துள்ளது. அதேநேரம், விமானத்தில் பெரும்பாலானோர் அமர விரும்பாத '11ஏ' இருக்கையில் அமர்ந்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்பவர் இவ்வளவு பெரிய விமான விபத்தில் இருந்து சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வாழ்க்கை, யாராலும் புரிந்துக் கொள்ள முடியாதது...


Click it and Unblock the Notifications










