விக்ரம் வேதாவிற்கு பிறகு விஜய்சேதுபதி காட்டில் அடைமழை... ரூ.1 கோடிக்கு புதிய கார் வாங்கினார்..!!

Written By:

தமிழ் சினிமாவில் எத்தனையோ வெற்றிகள் திரைப்படங்கள் மூலம் கிடைத்திருந்தாலும் வெளியில் எளிமை நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

நிஜத்தில் மட்டும் எளிமையாக இல்லாமல், திரைப்படங்களில் கூட மிக சாதரண கதாபாத்திரங்களில் ஆர்பாட்டாமல் இல்லாமல் நடிக்கக்கூடியவர் விஜய் சேதுபதி.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

இதனால் ’சேதுபதி’ திரைப்படம் வெளியான சமயத்தில் மக்கள் செல்வன் என்ற புனைப்பெயர் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் தற்போது வரும் திரைப்படங்களில் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் துணைப் பெயரை கொண்ட நாயகனனார். அதை மக்களும் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது விஜய் சேதுபதிக்கு மகிழ்ச்சி அளித்தது.

Recommended Video - Watch Now!
2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

சமீபத்தில் மாதவனுடன் அவர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் பெரிய ஆர்ப்பாட்டாமல் இல்லாமல் வெளியானது.

சரியான விளம்பர யுக்திகள் இல்லை என்பதால் விக்ரம் வேதா ரசிகர்களிடம் வரவேற்பு பெறுமா என்று கேள்வி எழுந்தது.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

ஆனால் ஊடகங்கள் விக்ரம் வேதா படத்தை புகழ்ந்து தள்ளின. அதைப்பார்த்து ரசிகர்களும் படத்திற்கு புகழாரம் சூட்டினர். மொத்தத்தில் விக்ரம் வேதா தமிழ் சினிமாவில் தெறி ஹிட்.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

இதனால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய்சேதுபதிக்கு நீண்ட நாள் கனவு நனவாகி தற்போது நினைவாகி உள்ளது. இந்த கனவு நிறைவேறியதில் அவரை விட அவரது குடும்பத்தினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

படப்பிடிப்பு மற்றும் பொதுவிழாக்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அனுப்பும் கார்களையே அதிகம் விஜய்சேதுபதி பயன்படுத்துவார்.

இல்லையேல் சில தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் போது அவரிடம் உள்ள ஹேட்ச்பேக் மாடல் காரை பயன்படுத்துவார்.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

ஆடம்பரங்களை பெரிதும் விரும்பாதவர் விஜய் சேதுபதி. ஆனால் திரையுலகில் உயரிய பிராண்டு கார் வைத்திருந்தால் தான் பெரிய மதிப்பு. தற்போது இந்த டிரென்டில் இவரும் இணைந்துள்ளார்.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

பிஎம்டபுள்யூ-வின் 7 சிரீஸ் காரை விஜய்சேதுபதி தற்போது வாங்கியுள்ளார். வெள்ளை நிறத்திலான இந்த செடான் மாடல் கார் இந்தியாவில் குறைந்த எண்ணிகையிலே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

எம் 760எல்.ஐ மாடல் காரான இதில் 6.6 லிட்டர் கொண்ட ட்வின்டர்போ வி12 எஞ்சின் உள்ளது. 601 பிஎச்பி பவர் மற்றும் 800 என்.எம் டார்க் திறன் இதன் மூலம் கிடைக்கும்.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட்ஸ் கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த மாடல், இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ.1.12 கோடி மதிப்பில் விற்பனை ஆகிறது.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

திரை நட்சத்திரங்கள் பலர் பிஎம்டபுள்யூ தயாரிப்புகளையே அதிகம் விரும்புகின்றனர். நடிகர் விஜய் வாங்கிய பிறகு பிஎம்டபுள்யூ தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் அடித்தது.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

அவரை தொடர்ந்து நயன்தாரா, பிரசன்னா, ஏ.ஆர். முருகதாஸ் உட்பட பல பிரபலங்கள் பிஎம்டபுள்யூ தயாரிப்புகளை வாங்கத்தொடங்கினர்.

பிஎம்டபுள்யூ கார் வாங்கினார் விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திர அந்தஸ்தை விக்ரம் வேதா படத்தின் மூலம் பெற்று விட்ட விஜய் சேதுபதியும் பிஎம்டபுள்யூ வைத்திருக்கும் தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Kollywood Actor Vijay Sethupathi Buys New BMW 7 Series Car after Vikram Vedha Success. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more