ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
இன்று தமிழக முழுவதும் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், இன்று காலை நடிகர் விஜய் சேதுபதி வாக்குச்சாவடியில் வந்து வாக்கு செலுத்தி விட்டு திரும்பி பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சட்ட விதிமுறைகளை மீறி நடிகர் விஜய் சேதுபதி இப்படி பைக்கில் பயணித்தது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. தமிழக முழுவதும் ஒரே கட்டமாக என்று வாக்குப்பதிவு நடப்பதால் பல்வேறு பகுதிகளில் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் எல்லாரும் வரிசையாக வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஊடகங்களில் பிரபலங்கள் வந்து வாக்குப்பதிவு செய்து செல்லும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வைரலாக பரவி வருகின்றன. முக்கியமாக சமூக வலைதளங்களில் இது போன்ற காட்சிகள் தற்போது அதிகமாக பரவி வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
சென்னையில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் விஜய் சேதுபதி அங்கு இருந்த ஒரு மோட்டார் பைக்கில் பின்பக்கம் ஏறிய அமர்ந்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். மோட்டார் பைக்கை அவருடன் வந்த நபர் ஓட்டி சென்றார். இந்த வீடியோவில் பைக்கில் இருந்த இரண்டு பேருமே ஹெல்மெட் அணியாமல் பயணித்தது தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், பலர் நடிகர் விஜய் சேதுபதி மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தது அவரது ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விட்டதாக விமர்சனம் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் இது குறித்த பதிவுகளை நாம் அதிகம் பார்க்க முடிகிறது. இந்திய மோட்டார் வாகன சட்டப்படி டூவீலரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.
ஹெல்மெட் என்பது டூவீலர் வாகன ஓட்டிகளுக்கு உயிருக்கு பாதுகாப்பான ஒரு விஷயமாக இருக்கும். டூவீலரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் அதில் தலையில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருப்பதால் அரசு இந்த சட்டத்தை அமலில் வைத்துள்ளது. இதனால் டூவீலர் ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணிந்து சென்றால்தான் விபத்து ஏற்பட்டாலும், அதில் உயிரிழப்புகள் ஏற்படுவது என்பது தவிர்க்கப்படும்.
இதன் காரணமாக அரசு டூவீலரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை வைத்திருந்தாலும், ஆங்காங்கே சிலர் அதை பின்பற்றாமல் இருக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் இது குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பலர் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் சென்னையிலேயே இப்படி ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பயணித்தது அவரது ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால் பலர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து நடிகர் விஜய் சேதுபதி பயணித்த டூவீலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
நீங்கள் இனி சாலையில் வாகனம் ஓட்டும் போது டூவீலர் வாகனத்தை ஓட்டினால் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள். டூ வீலர் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய தேவை இருக்கிறது. ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிறு விபத்தில் கூட உங்கள் உயிர் போகவே வாய்ப்புள்ளது என்பதால் அரசு இதை கட்டாயமாக்கி உள்ளது. இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா நடிகர்கள் போற்ற பிரபலங்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவர்களது ரசிகர்கள் உற்று நோக்கி வருகிறார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்யவில்லை என்றால் அவர்கள் தவறான முன்னுதாரணமாக இருந்து விடுவார்கள். இப்படியாக நடிகர் விஜய் சேதுபதி ஹெல்மெட் அணியாமல் பயணித்தது சிறிய விஷயமாக இருந்தாலும், இன்று சமூக வலைதளங்களில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








