பணம் கொழுத்து போனவர்களால் மட்டுமே இந்த கார வாங்க முடியும்.. மாநிலத்திலேயே முதல் ஆளா வாங்கிய கேரள பணக்காரர்!!

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), இந்தியாவில் சமீபத்தில் இரண்டு கார் புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய தலைமுறை கார்னிவல் (New Gen Carnival) மற்றும் இவி6 (EV6) ஆகியவையே அவை ஆகும். கார்னிவல் இந்தியர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இந்த புதிய தலைமுறை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் வரை இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத நிலையே தென்பட்டது.

அதாவது குறிப்பிட்ட காரணங்களுக்காக விற்பனையில் இருந்து கார்னிவல் சொகுசு காரை கியா அகற்றியிருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் புதிய தலைமுறையாக நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது கார்னிவல். ஆனால், பழைய விலையில் அல்ல. முன்பு விற்பனையில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிக விலையிலேயே புதிய தலைமுறை கார்னிவல் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Viju jacob first owner of kia carnival in kerala

இந்த கார் மாடலையே மாநிலத்திலேயே முதல் ஆளாக கேரள வாசி ஒருவர் வாங்கி இருக்கின்றார். அவர் வேறு யாருமல்ல, கேரளாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான விஜு ஜேகப்-தான். சிந்தைட் இன்டஸ்ட்ரீஸ்-இன் நிர்வாகத் தலைவரான இவரிடத்தில் ஏற்கனவே பல விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி காரையும் அவர் வாங்கி இருக்கின்றார். ஏற்கனவே இந்த செல்வந்தரிடத்தில் ஃபெராரி ரோமா, மெர்சிடிஸ் மேபேக், மெர்சிடிஸ் ஜி-வேகன் மற்றும் பிஎம்டபிள்யூ பிராண்டின் விலையுயர்ந்த கார் என மிகப் பெரிய சொகுசு கார்கள் படையே அவரிடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.

விஜு ஜேக்கப் தேர்ந்தெடுத்து இருப்பது புதிய கார்னிவல் கார் மாடலின் ஃபியூஷன் பிளாக் நிற தேர்வாகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 63.90 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஒரே ஒரு தேர்வில் மட்டுமே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இவ்வளவு அதிக விலையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 நாட்களில் ஒரு ஆண்டுக்குக் கிடைக்கக்கூடிய ஒட்டுமொத்த ஸ்டாக்கையும் இந்தியர்கள் வாங்கிவிட்டனர். ஆகையால், இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி காராக கார்னிவல் மாறியிருக்கின்றது.

லக்சூரி அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மிக தாராளமாக தாங்கியிருக்கும் கார் மாடலாகவே புதிய தலைமுறை கார்னிவல் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில் பயணிகளின் சுவாரஷ்யமான பயணத்திற்காக இந்த காரில் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, இருக்கையில் வெண்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், மழை வந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டாப் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, இரண்டு 12.3 அங்குல திரைகளையும் இந்த கார் தாங்கியிருக்கும். டிரைவருக்கான திரையாக ஒன்றும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக மற்றொன்றும் செயல்படும்.

இதுதவிர, 11அங்குல ஹெட்-அப் திரை, 8ஏர் பேக்குகள், லெவல் 2-வகை அடாஸ் அம்சம், இபிடி உடன் கூடய ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.2லிட்டர், 4சிலிண்டர் டீசல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 193எச்பி மற்றும் 441என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். 8ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முந்தைய வெர்ஷன் ரூ. 35.50 லட்சத்திற்கே விற்கப்பட்டது. அப்போதும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தற்போது இதைவிட கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிக விலையில் விற்பனைக்கு வந்தும் பணக்காரர்கள் இந்த காரை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆமாங்க, இந்த காருக்கு பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 23, 2024, 18:59 [IST]
English summary
Viju jacob of synthite industries becomes first owner of 2024 kia carnival in kerala
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+