பயங்கரமான உருட்டா ல்ல இருக்கு!! ரோல்ஸ்-ராய்ஸ் கார் விபத்து - காரை ஓட்டியது அவரே கிடையாதா... வழக்கறிஞர் பேட்டி!
நெடுஞ்சாலையில் மெதுவாக வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் சமீபத்தில் விபத்திற்குள்ளான தொழிலதிபரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கூற்றை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வது? உண்மையில் ஹைவேயில் அதிவேகத்தில் தான் செல்ல வேண்டுமா? யார் அந்த, விபத்தில் காயமடைந்துள்ள தொழிலதிபர்? என்பவற்றை அறிய வாருங்கள் செய்திக்குள் போவோம்.
விகாஸ் மலு (Vikas Malu), குபேர் குழுமத்தின் இயக்குனர். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் இவர் சென்ற ரோல்ஸ்-ராய்ஸ் கார் டேங்கர் லாரி மீது மோதியதில் பயங்கர விபத்துக்குள்ளான செய்தி நாடு முழுவதும் கவனத்தை பெற்றது. இதில் மோசமான செய்தி என்னவென்றால், விபத்தின்போது கார் சுமார் மணிக்கு 200கிமீ வேகத்தில் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வளவு வேகத்தில் ஒரு கார் விபத்திற்கு உள்ளாகினால் அதனுள் பயணித்தவர்கள் உயிர் பிழைப்பது மிக கடினம். ஆனால் இந்த சம்பவத்தில் விபத்துக்கு உள்ளானது ரோல்ஸ்-ராய்ஸ் என்ற விலையுயர்ந்த, அதேநேரம் வலிமையான கார் என்பதால், அதனுள் இருந்த குபேர் குழும இயக்குனர் விகாஸ் மலு உயிர் பிழைத்துள்ளார். இருப்பினும், அவர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விஷயத்தில் பலரும், காயமடைந்த விகாஸ் மலு மீது பரிதாபப்பட்டாலும், சிலர் யார் அவரை 200kmph வேகத்தில் காரை ஓட்ட சொன்னார்கள்? என இந்த விபத்துக்கு முழு காரணமும் அவர் தான் என விகாஸ் மலு மீது குற்றம் சுமத்த ஆரம்பித்தனர். இந்த நிலையில், இதுகுறித்து விகாஸ் மலுவின் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் தாகூர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, விபத்திற்கு முன்பே விகாஸ் மலுவால் முறையாக நடக்க முடியாது. ஆதலால் அவர் கார் ஓட்டுவதில்லை என்றார்.

சம்பவத்தின்போது விகாஸ் மலுவின் ரோஸ் ராய்ஸ் காரை அவரது ஓட்டுனர் டஸ்பிர் ஓட்டியுள்ளார். இந்த விபத்தில் இருந்து விகாஸ் மலு உயிர் பிழைத்தாலும், மோதலுக்கு உள்ளான டேங்கர் லாரியின் ஓட்டுனர் மற்றும் லாரி கிளீனர் என இருவர் உயிரிழந்துள்ளனர். விகாஸ் மலுவுக்கு குருக்கிராமில் உள்ள ஓர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு இன்று (ஆகஸ்ட் 28) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
கார் ஓட்டுனர் டஸ்பிர் அளித்த வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறும் விகாஸ் மலுவின் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் தாகூர், விரைவுச்சாலை (Expressway)-இல் குறைந்த வேகத்தில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என கூறியதோடு, காரை ஓட்டுனர் வேகமாகவோ அல்லது குறைந்த வேகத்திலோ இயக்க விகாஸ் மலு கூறவில்லை என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

அதாவது, முழுக்க முழுக்க ஓட்டுனர் தனது சொந்த விருப்பத்திற்கு ஏற்ற வேகத்தில் காரை இயக்கியுள்ளார். "விகாஸ் மலுவிடம் 7-8 கார் ஓட்டுனர்கள் உள்ளனர். விபத்திற்கு உள்ளான ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஓட்டியவர் பெயர் டஸ்பிர். விபத்தில் விகாஸ் மலுவின் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், விகாஸ் மலுவின் முதுக்கெலும்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஒருவரது உதவியில்லாமல், அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை" என அவரது வழக்கறிஞர் தாகூர் கூறியுள்ளார். விபத்து குறித்து பேசிய வழக்கறிஞர், "விகாஸ் மலு, அவருக்கு தெரிந்த பெண் மற்றும் ஓட்டுனர் என முவர் காரில் இருந்துள்ளனர். விகாஸ் வீட்டில் இருந்து காலை 10 மணியளவில் கிளம்பியுள்ளார். விபத்து காலை 11 மணியளவில் நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் விகாஸ் மலுவுக்கு சொந்தமானது. பெட்ரோல் டேங்கர் லாரி தவறான திசையில் இருந்து வந்துள்ளது.

தவறான திசையில் இருந்து வந்தது மட்டுமில்லாமல், எந்தவொரு இண்டிகேட்டர் எச்சரிக்கையும் இன்றி யு-டர்ன் அடித்துள்ளது. சம்பவத்தின்போது விகாஸ் மலுவின் காருடன் கான்வே போன்று 4 கார்கள் சென்றன. விகாஸின் கார் அதிவேகத்தில் செல்லவில்லை. விரைவுச்சாலையில் ஸ்பீடு லிமிட் 120kmph. விகாஸின் கார் 100kmph+ வேகத்தில் சென்றுள்ளது. கார் ஓட்டுனர் சரியான நேரத்தில் பிரேக் கொடுக்கவில்லை" என கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விபத்து நடந்த நாளில் விகாஸ் மலுவின் கார் 200kmph வேகத்தில் சென்று விபத்துக்கு உள்ளானதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், கார் அவ்வளவு வேகத்தில் எல்லாம் செல்லவில்லை. 100kmph+ வேகத்தில்தான் சென்று கொண்டு இருந்தது என விகாஸின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதில் எது உண்மை என்பதை போலீஸார் தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் ரோல்ஸ்-ராய்ஸ் காரில் எளிதாக 200kmph வேகத்தை எட்ட முடியும்.


Click it and Unblock the Notifications
