ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..

பள்ளத்தாக்கில் சிக்கிய லாரி பெரும் மக்களின் சக்தியுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..

நாகலாந்து மாநிலம், குட்சபோ என்ற கிராமத்தில் லாரி ஒன்று பள்ளதாக்கில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனருக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை என்றாலும், அந்த கிராமத்தில் போதுமான வசதிகள் எதுவும் இல்லை என்பதால் நிலைமை மிகவும் மோசமானது.

ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..

இதனால் அந்த கிராமத்து மக்களே லாரியை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்த ஃபேஸ்புக் வீடியோவில், நூற்றுக்கணக்கான பொது மக்கள் வெறும் கயிற்றின் மூலமாக லாரியை இழுப்பதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவை பதிவிட்டு அரசியல்வாதிகள் உள்பட பலரும் தங்களது பாராட்டுகளை அந்த மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு உபகரணமும் இல்லாததால் லாரி இன்ச் பை இன்சாகவே மேலே வருகிறது. மக்கள் பம்போ மரங்களையும் இந்த முயற்சியில் பயன்படுத்தியுள்ளனர்.

ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..

சாதாரண சாலைகளில் இவ்வாறு அதிக எடை கொண்ட லாரியை இழுப்பதே மிகவும் கடினம். அதிலும், இப்படிப்பட்ட வளைவுகளை கொண்ட மலை சாலைகளில் லாரியை பள்ளத்தில் இருந்து இழுப்பது என்பது உண்மையில் சவாலான காரியமே.

ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..

ஊர் மக்களின் ஈடுப்பாடு இல்லை என்றால் நிச்சயம் லாரியை மேலே கொண்டுவர வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே லாரிகளின் எடை ஏறக்குறைய 15 டன்களில் இருந்து 20 டன்கள் வரையில் இருக்கும். இந்த செய்தியில் பார்க்கும் லாரி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையது ஆகும்.

ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக விற்பனை நிறுத்தப்பட்ட சஃபாரியை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதைய 5-இருக்கை ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக வெளிவரும் சஃபாரியின் மறு அறிமுகம் வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
People power! Village comes together to pull truck out
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X