சொகுசு கார்களாக வாங்கி குவிக்கும் பிரபல வில்லன் நடிகர்!! இப்போது பிஎம்டபிள்யூ பிராண்டில்...

நடிகர்களையும் சொகுசு கார்களையும் பிரிக்கவே முடியாது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் விலைமிக்க கார்களே தங்களின் மதிப்பை பொது வெளியில் நேரடியாக & உடனடியாக வெளிக்காட்டுவதாக அவர்கள் நினைக்கின்றனர். இதனாலேயே சினிமா பிரபலங்கள் சொகுசு கார்களை புதியதாக வாங்குவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.

இந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரும், தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளவருமான சோனு சூட் புதியதாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் மேலும் ஒரு தகவலையும் அவர் தனது ரசிகர்களுக்காக தெரிவித்துள்ளார். அதாவது, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேயத்தில் ஜாய் டவுன் 2022 என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சொகுசு கார்களாக வாங்கி குவிக்கும் பிரபல வில்லன் நடிகர்!!

வருகிற டிசம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அங்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் சோனு சூட் தனது புதிய பிஎம்டபிள்யூ காருடன் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியை வந்து ரசிக்குமாறு சோனு சூட் தனது இந்த இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் அதன் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். சோனு சூட்டின் இன்ஸ்டாகிராம் பதிவில் காரின் நம்பர் ப்ளேட்டை இணையத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது சில விபரங்கள் நமக்கு தெரியவந்துள்ளன.

அதாவது, சோனு சூட் தனது இந்த புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வாங்கியுள்ளார். இவரது இந்த கார் கடந்த 1 மாதத்திற்கு முன்பே ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட் வைத்திருப்பது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740 எல்ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டாகும். வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.1.44 கோடி ஆகும்.

இன்னும் இன்ஸ்சூரன்ஸ் தொகை, ஆர்டிஓ பதிவுக்கான கட்டணம், சாலை வரி உள்ளிட்டவற்றை எல்லாம் சேர்த்தால் ரூ.2 கோடியை நெருங்கும். பிஎம்டபிள்யூ இந்தியாவில் விற்பனை செய்யும் விலைமிக்க லக்சரி செடான் காரான 7 சீரிஸ் நம் நாட்டில் லாங்-வீல்பேஸ் வெர்சனில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் 7 சீரிஸ் காரை 6-சிலிண்டர் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் தேர்வுகளில் வாங்க முடியும். ஹைப்ரீட் தேர்விலும் இந்த கார் கிடைப்பது கூடுதல் சிறப்பு.

ஆனால் நடிகர் சோனு சூட் புதியதாக வாங்கியிருப்பது என்னவோ பெட்ரோல் என்ஜின் உடன் தான். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் பெட்ரோல் என்ஜினுடனேயே 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆனால் டீசல் அல்லது ஹைப்ரீட் தேர்வில் 1 வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. டீசல் என்ஜின் உடன் 7 சீரிஸ் காரின் விலை சில இலட்சங்கள் குறைவே ஆகும். ஆனால் ஹைப்ரீட் தேர்வில் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஏறக்குறைய ரூ.1.75 கோடி.

நடிகர் சோனு சூட் புதியதாக வாங்கியிருக்கும் 740 எல்ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்-லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 335 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆனது என்ஜின் வழங்கும் ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.

தற்சமயம் நம் நாட்டில் விற்பனையில் இருப்பது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 6ஆம் தலைமுறை ஆகும். 7ஆம் தலைமுறை 7 சீரிஸ் லக்சரி செடான் கார் இந்திய சந்தையில் அடுத்த 2023இல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள 7ஆம் தலைமுறை 7-சீரிஸ் கார் அந்த நாடுகளில் முழு-எலக்ட்ரிக் வெர்சன்களில் விற்கப்படுகிறது. இதன் அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் 2022ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட், அப்டேட் செய்யப்பட்ட எம் 340ஐ மற்றும் புதிய எக்ஸ்.எம் கார்களை பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Villain actor sonu sood buys new luxury car bmw 7 series
Story first published: Tuesday, December 6, 2022, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X