மத்தவங்களுக்கு ஹோண்டா காரை விற்பாராம்.. இவர் மட்டும் இந்த கார்களை வாங்குவாராம்.. ஒரு நார்மல் கார்கூட இல்லையா!!
மற்றவர்களுக்கு ஹோண்டா கார் (Honda Car)-களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு வேற லெவல் ஆடம்பர கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றார். இவர் யார் என்பது பற்றிய தகவலையும், அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களின் லிஸ்ட்டையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விநாயக் கர்வே, இவரே அந்த நபர் ஆவார். இவர் ஹோண்டா கார் விற்பனையகத்தை வைத்திருக்கின்றார். இவர் இந்த தொழிலில் மட்டுமல்ல இன்னும் பல்வேறு பிசினஸ்களை மேற்கொண்டு வருகின்றார்.
இவரே சமீபத்தில் ஹோண்டா ஷோரூமில் வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan Series II) காரை டெலிவரி பெற்றார். இந்த சொகுசு காரை மட்டுமல்ல இன்னும் பல ஆடம்பர கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது இப்போது தெரிய வந்து இருக்கின்றது.

சில தினங்களுக்கு முன்னர் விநாயக் கர்வே, ஹோண்டா ஷோரூம் வாசலில் வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை டெலிவரி பெற்றதன் விளைவாக மிகவும் ஃபேமஸான நபராகவே மாறிவிட்டார். இந்த நிலையிலேயே இவர் (விநாயக் கர்வே) பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக, அவர் வைத்திருக்கும் ஆடம்பர கார்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடலை மட்டுமே அவர் பயன்படுத்தி வரவில்லை இன்னும் பல கார்களை பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ்-இன் மற்றுமொரு தயாரிப்பான கோஸ்ட் (Rolls Royce Ghost) கார் மாடலையும் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதேபோல், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 (Mercedes-Benz G63), ஜாகுவார் எஃப்-பேஸ் (Jaguar F-Pace), டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire), டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 (Toyota Land Cruiser LC300), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), பிஎம்டபிள்யூ இசட்4 (BMW Z4) மற்றும் போர்ஷே கேயன்னே (Porsche Cayenne) ஆகிய கார் மாடல்களையும் அவர் பயன்படுத்தி வருவது தெரிய வந்திருக்கின்றது.
இந்த கார்களை மட்டுமல்ல இன்னும் பல ஆடம்பர கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக மற்றவர்களுக்கு ஹோண்டா கார்களை விற்பனைச் செய்து வரும் விநாயக் கர்வே, தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு ரோல்ஸ் ராய்ஸ் போன்ற ஆடம்பர கார்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதேபோல், இவர் ஹோண்டா கார்களின் டீலர்ஷிப்பை மட்டுமல்ல இன்னும் பல பிராண்டுகளின் டீலர்ஷிப்பையும் நடத்தி வருகின்றார். அந்தவகையில், ஸ்கோடா (Skoda), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகிய கார் பிராண்டுகளின் டீலர்ஷிப்பையே நடத்தி வருகின்றார். இதுமட்டுமல்ல ஏத்தர் (Ather) மற்றும் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) போன்ற நிறுவனங்களின் டீலர்ஷிப்பையும் அவர் ரன் செய்து வருகின்றார். மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இவரின் அனைத்து வாகன விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பன்முக பிசினஸ்களை செய்து வருபவர் இதுபோன்று ஆடம்பர கார்களை வாங்குவதில் ஒன்றும் பெரிய அளவில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும், ஹோண்டா, ஸ்கோடா நிறுவன கார்களை விற்பனைச் செய்து வருபவர் வழக்கமான கார்களைக் காட்டிலும் அதிக ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருபவது சற்றே நமக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








