100கிராம் அதிக எடையால் தகுதியிழந்த வினேஷ் போகத்திடம் இத்தனை கார்கள் இருக்குதா? ஆச்சரியமா இருக்குதே!

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தி போட்டியில் சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் கடைசி நேரத்தில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதன் காரணமாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியா முழுவதும் இது குறித்த பேச்சு மிகப் பெரிய விவாதமாக ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வினேஷ் போகத் குறித்து பலர் பேசி வருகிறார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தரப்பிலிருந்து வீரர்கள் பலர் கலந்து கொண்டு உள்ளார்கள் .அதில் இந்தியாவின் பிரபலமான மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். இவர் அறையிறுதி போட்டியை வெற்றிகரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் இறுதி போட்டியில் வென்றால் தங்கப்பதக்கம் என்ற சூழ்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது.

vinesh phogat car collection

வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் முன்பு இவரது எடையை பரிசோதனை செய்த போது 100 கிராம் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக இவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தற்போது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் சாத்தியங்கள் குறித்து பலர் பேசி வருகிறார்கள்.

மேலும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வினேஷ் போகத் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்து அறிந்து கொள்ள பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் நாம் இங்கே வினேஷ் போகத்தின் கார் குறித்த விபரங்களை தான் காணப் போகிறோம்.

vinesh phogat car collection

வினேஷ் போகத் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவிற்காக மல்யுத்த வீராங்கனையாக செயல்பட்டு வருகிறார். இவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சொந்தமாக பல்வேறு விதமான கார்களை வைத்துள்ளார். பலருக்கு இவரிடம் இந்த கார்கள் எல்லாம் சொந்தமாக இருக்கிறதா என ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு கார் கலெக்ஷனை வைத்துள்ளார்.

முதலில் இவரிடம் டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் கார் இருக்கிறது. இந்தியாவில் பிரபலமான சொகுசு கார்களில் இதுவும் ஒன்று. இந்திய மக்களின் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் முக்கியமாக அரசியல் வட்டாரங்களில் இந்த கார் பிரபலமாக இருக்கிறது. இந்த கார் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மிக முக்கிய பதவியில் பொறுப்பில் இருப்பவர்களாக இருப்பார்கள் என்ற பிம்பமும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

vinesh phogat car collection

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 33.43 லட்சம் முதல் ரூபாய் 51.44 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் வேரியன்டிற்கு ஏற்ப விலை இருக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்ட் மற்றும் ஜிஆர் எஸ் ஆகிய இரண்டு விதமான டிரிம்களில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இவரிடம் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இருக்கிறது. பொதுவாக இந்த காரில் முக்கியமான இடங்களுக்கு செல்வது விமான நிலையங்களுக்கு புறப்பட்டு செல்வது போன்ற பயன்பாட்டிற்காக பயன்படுத்துவார்கள். இதில் அதிக இட வசதி இருப்பதால் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு அதிக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கும்.

அதன் காரணமாக வினேஷ் போகத் இந்த காரை பயன்படுத்தி வருகிறார். அதிக லக்கேஜ் எடுத்து செல்வது மட்டுமல்லாமல் இந்த கார் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உடன் அழைத்துச் செல்ல அதிக நபர்கள் இருக்கும்போதும் இந்த காரை பயன்படுத்த முடியும் என்பதால் இந்த காரை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அடுத்ததாக வினேஷ் போகத் காஸ்ட்லியான காராக மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்இ என்ற எஸ்யூவி ரக கார் இருக்கிறது. இந்த கார் ரூ1.15 கோடி என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை முக்கியமான இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தி வருகிறார். முக்கியமாக விழாக்கள், விருது விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு இந்த காரில் பயணம் செய்து வருகிறார். இதில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் சொகுசு வசதியும் நிறைந்ததாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். அவர் தங்கம் வெல்லாவிட்டாலும் இந்திய மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு எப்பொழுதும் இந்திய மக்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் இவர் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.-

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2024, 12:50 [IST]
English summary
Vinesh phogat car collection toyota mercedes benz cars
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X