புடவை விற்ற காசில் இந்த காரை வாங்கிட்டாரா! அண்ணாச்சிக்கே டஃப் கொடுப்பாரு போலையே.. செய்கூலி, சேதாரம்கூட வராதே!

தமிழக ஜவுளி துறையை லெஜண்ட் சரவணா எப்படி ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றாரோ, அவரை போலவே கேரளாவின் ஜவுளி துறையை ஆட்சிச் செய்துக் கொண்டிருப்பவராக இருக்கின்றார் டிகே விநோத் குமார். மஹாலக்ஷ்மி சில்க்ஸ் எனும் துணிக் கடையையே அவர் கேரளாவில் நடத்தி வருகின்றார். அம்மாநிலத்தில் மட்டும் மூன்று ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தற்போது அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த காஸ்ட்லியான காரை வாங்கி அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க செய்திருக்கின்றார்.

அவர் வாங்கி இருப்பது போர்ஷே கேயன்னே (Porsche Cayenne) கார் மாடல் ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த ஆடம்பர கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1.42 கோடிக்கும் அதிகம் ஆகும்.

Vinod kumar purchases porsche cayenne gts

இதன் உயர் நிலை வேரியண்டு ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய மிகவும் காஸ்ட்லியான காரையே கேரளாவைச் சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் டிகே விநோத் குமார் வாங்கி இருக்கின்றார். இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

அதிக ஆடம்பர அம்சங்கள் மட்டுமின்றி அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்களையும் தாங்கி இருக்கக் கூடிய ஓர் கார் மாடலே போர்ஷே கேயன்னே ஆகும். இந்த காரில் எஞ்சினைப் பொருத்த வரை 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி6 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 353 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 248 கிமீ ஆகும். அதேவேளையில், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.7 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

இதேபோல், இந்த கார் மூன்று திரை செட்-அப்பைக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதில் 12.6 அங்குலத்தில் இருக்கும் திரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும், 10.9 அங்குலத்தில் இருக்கும் திரை பயணிகளுக்கான திரையாகவும் செயல்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், 12.3 அங்குலத்தில் சென்டர் கன்சோல் ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Vinod kumar porsche cayenne

14 ஸ்பீக்கர்கள் கொண்ட 710 வாட் போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் உள்ளிட்ட ஏராளமான பிரீமியம் மற்றும் ஆடம்பர வசதிகளும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. டிகே விநோத் குமாரிடம் இந்த கார் மாடல் மட்டுமல்ல இன்னும் சில ஆடம்ப கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அழகான ஆடம்பர கார் மாடல்களில் போர்ஷே கேயன்னே-வும் ஒன்றாகும். இந்த காருக்கு சொகுசு எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய காரையே செய்கூலி, சேதாரம்கூட வராத ஓர் தொழிலைச் செய்து டிகே விநோத் வாங்கி இருக்கின்றார். இதனால்தான் பலரின் கவனமும் இவர் பக்கம் தற்போது திரும்பி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 26, 2025, 11:23 [IST]
English summary
Vinod kumar mahalekshmi silks managing director buys porsche cayenne worth rs 2 cr
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+