ரூ.10 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய சாமியார்
சண்டிகர் ஆர்டிஓ அலுவலகத்தில் பேன்ஸி நம்பர்கள் ஏலம் விடப்படுவது பற்றி முன்பே நாம் செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். மேலும், சினிமாக்காரர்களும், பெரும் தொழிலதிபர்களும் தங்களது காருக்கு பேன்ஸி நம்பரை பல லட்சம் கொட்டி கொடுத்து வாங்குவது வழக்கம். ஆனால், அதிலிருந்து சற்று வித்தியாசமான செய்திதான் இது.
சண்டிகர் நகரில் செக்டார் 19ல் உள்ள அனுமான் கோயிலை சேர்ந்த ஸ்ரீ குரு கோரக்ஷ்நாத் எனும் சாமியார் ரூ.10.5 லட்சம் கொடுத்து தனது ஆடி க்யூ7 சொகுசு காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை ரூ.60 லட்சம். அதற்கு பல லட்சங்களை கொடுத்து பேன்ஸி நம்பரை ஏலத்தில் அடித்து பிடித்து பெற்றுள்ளார்.

சாமியாரின் பேன்ஸி நம்பர்
சிஎச் 01 ஏஆர் 0001 என்ற பேன்ஸி நம்பரைத்தான் இவ்வளவு லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். இதே ஏலத்தில் 0100 என்ற பேன்ஸி நம்பர் ரூ.4.20 லட்சத்துக்கும், 0009 என்ற நம்பர் ரூ.4 லட்சத்துக்கும், 0002 என்ற நம்பர் ரூ.3.5 லட்சத்துக்கும் ஏலம் போனது.

முந்தைய பேன்ஸி நம்பர் ஏலங்கள்
இதற்கு முன்னர் சண்டிகர் ஆர்டிஓ அலுவலகத்தில் சிஎச் 01 ஏஎன் 0001 என்ற எண் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது. பஞ்சாபை சேர்ந்த ஜெகஜீத் சிங் சஹால் எனும் தொழிலதிபர் ஒரு கோடி மதிப்புடைய தனது டொயோட்டா லேண்ட் குரூஸர் காருக்கு இந்த எண்ணை ஏலத்தில் வாங்கினார்.

முந்தைய பேன்ஸி நம்பர் ஏலங்கள்
சிஎச் 01 ஏபி 0001 என்ற பேன்ஸி நம்பர் ரூ.26 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை அமர்ஜித் சிங் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் தனது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காருக்காக வாங்கினார்.

என்ன கொடுமை சரவணா இது?
பஞ்சாபை சேர்ந்த ரிக்கி பிரார் என்ற பெரு நிலக்கிழார் ஒருவர் தனது வெஸ்பா ஸ்கூட்டருக்கு பிபி 30 ஜே 0003 என்ற பேன்ஸி நம்பரை ரூ.12 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.


Click it and Unblock the Notifications








