Audi காரில் டீ விற்கும் இளைஞர்! இதுக்கு பின்னால இப்படி ஒரு காரணமா! மனுஷன் ஒரே நாள்ல எங்கயோ போய்ட்டாரு!
ஆடி (Audi) நிறுவனத்தின் சொகுசு கார்கள் (Luxury Cars) மிகவும் விலை (Price) உயர்ந்தவை. எனவே யாராவது ஒருவர் ஆடி காரில் வந்தால், மொத்த கூட்டமும் அவரையேதான் உற்று நோக்கும். உண்மையில் ஆடி காரை வைத்திருப்பவர்களுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
அப்படிப்பட்ட ஆடி காரில், இளைஞர் ஒருவர் தற்போது டீ (Tea) வியாபாரம் செய்கிறார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? சந்தேகப்படாதீர்கள். இது உண்மைதான். இணையதளங்களில் தற்போது வைரல் வீடியோக்கள் (Viral Videos) பலவற்றை நீங்கள் காண முடியும். அந்த வகையில் ஒரு வீடியோ தற்போது நமது கவனத்திற்கு வந்துள்ளது.

இளைஞர் ஒருவர் ஆடி காரில் டீ வியாபாரம் செய்வதை அந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. ஆடி காருக்கு அருகே டேபிள் ஒன்றை வைத்து அந்த இளைஞர் டீ வியாபாரம் செய்து வருகிறார். அந்த டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அந்த காரில் லக்கேஜ்களை வைக்க கூடிய 'பூட்' பகுதி திறந்திருக்கிறது.
அதில் ஒரு சில ஃபிளாஸ்க்குகளை (Flask) நம்மால் பார்க்க முடிகிறது. இந்த இளைஞர் டீ விற்பனை செய்வதற்காக பயன்படுத்தி கொண்டிருப்பது ஆடி ஏ6 (Audi A6) கார் ஆகும். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி ஏ6 காரின் ஆரம்ப விலையே 61.60 லட்ச ரூபாயாக இருக்கிறது.
அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 67.76 லட்ச ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இவை எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரில் இளைஞர் டீ விற்பனை செய்து கொண்டிருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.
இதன் காரணமாகவே இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இந்த இளைஞர் ஏன் ஆடி காரில் டீ விற்பனை செய்கிறார்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது அவரது தொழில் யுக்திகளில் ஒன்றாக இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்.
எப்படி இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோ, அதேபோல் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த இளைஞர் இவ்வாறு செய்து கொண்டிருக்கலாம். சாலையில் நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஆடி காரில் ஒருவர் டீ விற்பனை செய்து கொண்டிருந்தால், நிச்சயமாக அங்கு செல்வீர்கள்தானே! இப்படி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த இளைஞர் ஆடி காரில் டீ விற்பனை செய்யலாம் என நாங்கள் நினைக்கிறோம்.
அத்துடன் செகண்ட் ஹேண்ட் கார்கள் (Second Hand Cars) சந்தையில் தற்போது ஆடி மட்டுமல்லாது, பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் கூட ஓரளவிற்கு குறைந்த விலையில், மிகவும் எளிதாக கிடைக்கின்றன. எனவே வியாபாரத்திற்காக வாங்கப்பட்ட யூஸ்டு காராக (Used Car) கூட இது இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
இந்தியாவில் இதுபோன்ற வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. பல லட்ச ரூபாய் மதிப்புடைய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 (Harley Davidson Street 750) போன்ற பைக்குகளில், பால் வியாபாரம் செய்த செய்திகளை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கடந்த காலங்களில் வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








